முதல் போட்டியில் மோதும் சென்னை குஜராத்; பதினாறாவது ஐபிஎல் சீசன் அறிவிப்பு வெளியானது!

0
371
Ipl2023

உலகின் நம்பர் ஒன் டி20 லீக் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் டி20 லீக். நம்பர் ஒன் என்றால் எல்லா விதத்திலும் நம்பர் ஒன். ஐசிசி உலகக்கோப்பையை விட முன்னணியில் இருப்பது ஐபிஎல் தொடர்தான்!

2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு இதுவரையில் மிக வெற்றிகரமாக பதினைந்து ஐபிஎல் தொடர்கள் வரிசையாக நடத்தப்பட்டுள்ளது. எட்டு அணிகள் பங்கேற்று வந்த ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் பங்கேற்றன!

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக மும்பை அணி ஐந்து முறை தொடரை வென்றும், அதற்கு அடுத்து நான்கு முறை தொடரை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐபிஎல் தொடரில் அரசர்களாக இருக்கின்றன.

இந்த நிலையில் ஐபிஎல் 16 வது சீசனுக்கான அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியது. இந்த முறை வழக்கம் போல் ஒவ்வொரு அணியும் அவர்களது சொந்த மைதானத்தில் சரிசம போட்டிகளை விளையாட உள்ளது.

இந்தத் தொடரிலும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் மும்பை,கொல்கத்தா,டெல்லி, ராஜஸ்தான், லக்னோ அணிகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது பிரிவில் சென்னை, பெங்களூரு, குஜராத், ஹைதராபாத்,பஞ்சாப் அணிகள் இடம் பெற்றுள்ளன.

- Advertisement -

பதினாறாவது ஐபிஎல் சீசன் மார்ச் 31ஆம் தேதி துவங்குகிறது. முதல் போட்டி அகமதாபாத்தில் நடக்க, குஜராத் சென்னை அணிகள் முதல் போட்டியில் மோத இருக்கின்றன. ஐபிஎல் சீசன் தொடங்கும் முதல் வாரத்தில் 10 அணிகளும் விளையாடி இருக்கும் வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் அடுத்தடுத்து வருகிறது!