சேப்பாக்கத்தில் மரண சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஓபனிங் ஜோடி!

0
130
CSK

ஐபிஎல் 16 வது சீசனில் ஆறாவது போட்டியில் இன்று சென்னை அணி தனது சொந்த மைதானத்திற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்து லக்னோ அணியை எதிர்த்து பலப்பரிட்சை நடத்திக் கொண்டிருக்கிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தார். லக்னோ அணியில் உனட்கட்டுக்கு பதிலாக யாஸ் தாக்கூர் என்ற இளம் வீரர் அறிமுகமானார். சென்னை அணி குஜராத் அணியுடன் மோதிய அதே அணியுடன் களமிறங்கியது.

- Advertisement -

சென்னை அணி கடந்த ஆட்டத்தில் தவறான பிளேயிங் லெவனுடன் களமிறங்கியதாக அந்த அணியின் ரசிகர்களை விமர்சனம் செய்து வந்த நிலையில் இன்று மகேந்திர சிங் தோனி வழக்கம்போல் தனது அணியை மாற்றிக் கொள்ளாமல் களமிறங்கினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க வீரர்களாக ருத்ராஜ் மற்றும் கான்வே இருவரும் வந்தார்கள். முதல் ஓவரை கையில் மேயர்ஸ் வீச அந்த ஓவரில் ஆறு ரன் மட்டுமே என்று பொறுமை காட்டியது இந்த ஜோடி.

அதற்கடுத்து ஆவேஷ் கான் ஓவரில் மெதுவாக ஆவேசம் காட்ட ஆரம்பித்த இந்த ஜோடி குறிப்பாக ருத்ராஜ் அதற்கு அடுத்து பந்து வீச வந்த யாரையுமே விட்டு வைக்கவில்லை. கிருஷ்ணப்பா கௌதம் ஓவரில் மூன்று சிக்ஸர்களைப் பறக்க விட்டு அசத்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கடந்த டெல்லி அணியுடன் போட்டியில் தனது வேகப்பந்து வீச்சின் மூலம் அந்த அணியை மிரட்டி ஐந்து விக்கட்டுகளை பறித்த மார்க் வுட் வந்தார். இவரை மூன்று பவுண்டரிகள் அடித்து வரவேற்றார் கான்வே. அடுத்த ருத்ராஜ் அவரை ஒரு அமர்க்களமான சிக்ஸர் அடித்து தன் பங்குக்கு வரவேற்றார்.

பவர் பிளே ஆன முதல் 6 ஓவர்களில் இந்த ஜோடி 79 ரன்கள் குவித்து அசத்தியது. தொடர்ந்து விளையாடிய ருதுராஜ் 26 பந்துகளில் அரை சதம் அடித்தார். அடுத்து கான்வே அதிரடியில் இறங்க எட்டு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 101 ரன்கள் குவித்து இருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது பவர் பிளேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குவித்துள்ள 79 ரன்கள்தான் பவர் பிளேவில் அதிகபட்ச ரன்கள் ஆகும். இதற்கு முன்பு கொல்கத்தா அணிவுடன் 2018 ஆம் ஆண்டு ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்தது அதிகபட்ச பவர் பிளே ரன்னாக இந்த மைதானத்தில் இருந்தது. தற்பொழுது தன் சாதனையை தானே உடைத்துக் கொண்டிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு பெங்களூர் அணி மும்பைக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் 68 ரன்கள் விக்கட் இழப்பிற்கு குவித்து மூன்றாவது இடத்தில் இந்த சாதனையில் இருக்கிறது.