மும்பை இந்தியன்ஸ் பைனலுக்கு போவது உறுதி… மும்பையுடன் பைனலில் யார் ஆடுவார்? – ஹர்பஜன் சிங், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணிப்பு!

0
8145

2023 ஐபிஎல் பைனலில் எந்த இரண்டு அணிகள் மோதிக் கொள்ளும் என்று தனது கணிப்பினை தெரிவித்துள்ளனர் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

2023 ஐபிஎல் சீசனில் வேறு எந்த வருடமும் இல்லாத அளவிற்கு பரபரப்பாக லீக் போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. முதல் இரண்டு இடங்களில் சிஎஸ்கே மற்றும் குஜராத் ஆகிய அணிகள் பிடித்து முதல் குவாலிஃபயர் போட்டியில் மோதி வருகின்றன. அதற்கு அடுத்த இரண்டு இடங்களை லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் பிடித்து 24ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றன.

- Advertisement -

இரண்டு போட்டிகளுமே சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகள் குறித்தும் பல்வேறு கணிப்புகள் மற்றும் யார் சிறப்பாக செயல்படுவார்கள்? எந்த அணி வெற்றிபெறும்? என்பது குறித்த கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் எந்த இரண்டு அணிகள் ஐபிஎல் பைனலில் மோதிக்கொள்ளும் என்று தங்களது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர்.

ஹர்பஜன் சிங் கூறியதாவது: “இந்த வருடம் ஐபிஎல் பைனலில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் என்று கருதுகிறேன். எனது மனது மற்றும் மூளை இரண்டும் இதைத்தான் சொல்கிறது. இரு அணிகளையும் பைனலில் பார்க்க விரும்புகிறேன். மீண்டும் ஒருமுறை பரபரப்பை உணரவேண்டும்.” என்றார்.

- Advertisement -

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியதாவது: “சந்தேகமே வேண்டாம். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு அணிகளும் தான் பைனலில் மோதிக்கொள்ளும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. சென்னையை சென்னையில் வீழ்த்துவது கடினம். பிளேஆப் சுற்றில் வென்று சிஎஸ்கே அணி பைனலுக்கு சென்றுவிடும். மும்பை அணி இரண்டாவது பைனலிஸ்டாக வருவார்கள் என்று நான் கருதுகிறேன். இதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.” என்றார்.