“சென்னை பிட்ச்ச தப்பா புரிஞ்சுகிட்டோம்.. ஆனா பாகிஸ்தானுக்கு எதிரா பக்காவா வருவோம்!” – ஆப்கானிஸ்தான் கேப்டன் அதிரடி பேச்சு!

0
644
Afghanistan

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை சுவாரசியப்படுத்திய அணி என்றால், அது ஆப்கானிஸ்தான் அணிதான். நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி, அரையிறுதிக்கான வாய்ப்புக்களுக்கு பல கதவுகளை திறந்து விட்டது.

இந்த நிலையில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில், சிறந்த சுழற் பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருப்பதால், இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் ஒரு மேஜிக்கை ஆப்கானிஸ்தான் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறியது. ஆனால் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து கொடுத்த நான்கு மிக முக்கியமான எளிய கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டு மொத்த போட்டியையும் தோற்று இருக்கிறது.

இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தந்த எளிமையான நான்கு கேட்ச் வாய்ப்புகளை ஆப்கானிஸ்தான் அணி வீணடிக்க, நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது.

இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மொத்தமாக 139 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. டாஸ் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்யாமல் போனது ஆப்கானிஸ்தானுக்கு பெரிய அடியாக விழுந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசி உள்ள ஆப்கானிஸ்தான் கேப்டன் கூறும் பொழுது “இது மிகவும் ஏமாற்றமான ஒன்றாக இருக்கிறது. இந்த மட்டத்தில் விளையாடும் பொழுது அப்படியான கேட்ச் வாய்ப்புகளை நாங்கள் எடுத்திருக்க வேண்டும். நாள் முடிவில் நாங்கள் விட்ட கேட்ச் வாய்ப்புகள் எங்களை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது. மற்றபடி அணி நன்றாக செயல்பட்டது. பீல்டிங்தான் மோசமாக அமைந்துவிட்டது.

கடைசி ஆறு ஓவர்களில் நாங்கள் கொஞ்சம் ரன்களை கூடுதலாக கொடுத்து விட்டோம். மேலும் 40 வது ஓவருக்கு முன்பு நாங்கள் இரண்டு கேட்ச் வாய்ப்பை விட்டோம். அவர்கள் இருவருமே செட்டில்டு ஆன பேட்ஸ்மேன்கள். இதனால்தான் எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை.

இந்த ஆடுகளத்தை எங்களால் சரியாக தீர்மானிக்க முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் பந்து கொஞ்சம் சுழன்று கொஞ்சம் மெதுவாக இருந்தது. நாங்கள் இந்த பகுதியில் நன்றாக பந்து வீசி ஆனால் மோசமாக பீல்டிங் செய்தோம் என்று நினைக்கிறேன்.

இன்று இரவு ஆட்டம் எங்களை காயப்படுத்தும். ஆனால் எங்களுக்கு இன்னும் நிறைய போட்டிகள் வர இருக்கிறது. அடுத்த போட்டி பாகிஸ்தானுக்கு எதிரானது. நாங்கள் திரும்பி சென்று எங்களை எப்படி மேம்படுத்தலாம்? என்று விவாதிப்போம். மேலும் வலுவாக மீண்டும் வருவதற்கு முயற்சி செய்வோம்!” என்று கூறியிருக்கிறார்!