“சென்னை வெயில்ல கேஎல்.ராகுலும்தான் விக்கெட் கீப்பிங் செஞ்சு 97 ரன் அடிச்சார்!” – ரிஸ்வான் பற்றி அக்தர் பரபரப்பு பேச்சு!

0
1026
Rahul

நேற்று இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு இறுதிவரை களத்தில் நின்று முகமது ரிஸ்வான் 130 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்து கொடுத்தார்!

இந்தப் போட்டியில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைந்திருந்தால், அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருக்கும். ஏனென்றால் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெறுவது மிக முக்கியம்.

- Advertisement -

இந்த நான்கு அணிகளிடம் ஒரு அணியிடம் தோல்வி அடைந்தால் கூட அரை இறுதியை எட்டுவதில் பெரிய சிரமம் உருவாகிவிடும். பெரிய அணிகள் அனைத்தையும் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம்.

எனவே முகமது ரிஸ்வான் அடித்த இந்த சதம் மிக முக்கியமான சதமாக பாகிஸ்தானுக்கும் அவருக்கும் அமைந்திருக்கிறது. ஆனால் அவர் நேற்று தசைப் பிடிப்பால் மிகவும் களத்தில் அவதிப்பட்டார். இது மட்டும் இல்லாமல் அவர் நகைச்சுவையாக தான் நடித்ததாக கூறியது சமூக வலைதளத்தில் இப்பொழுது பரபரப்பான விஷயமாக மாறிவிட்டது.

ஒரு வீரர் இந்திய சூழ்நிலையில் மதிய முதல் விக்கெட் கீப்பிங் செய்து, பிறகு 50 ஓவர்கள் வந்து விக்கெட்டுகளுக்கு இடையே கடுமையாக ஓடி விளையாடி சதம் அடித்து நிற்பது என்பது உடல் தகுதிக்கு மிகப்பெரிய சவால் விடும் விஷயம். இது அவ்வளவு சாதாரணமானது கிடையாது.

- Advertisement -

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் “முகமது ரிஸ்வானுக்கு அடிக்கடி தசைப்பிடிப்புகள் வரும். நீங்கள் பெரிய யூனிட் இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 50 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்து அதே நேரத்தில் சதம் அடித்து களத்தில் நிற்பது கடினமானது. ஆனால் கே எல் ராகுல் இதே போல் 50 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்து ஏறக்குறைய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்து நின்றார் என்பதும் முக்கியமானது.

முகமது ரிஸ்வான் ஒரு அற்புதமான ஆட்டத்தால் பாகிஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது ஆட்டத்தில் இரண்டாம் பகுதி மிகவும் முக்கியமான ஒன்று. 70 ரன்கள் கடந்த பிறகு அவர் விளையாடிய விதம் மனதை கவருவதாக இருந்தது. அவர் தனது நாட்டிற்காக விளையாடி வெற்றியை உறுதி செய்தார்.

அப்துல்லா ஷபிக் வாய்ப்பே இல்லாத ஒரு ஆட்டத்தை விளையாடினார். அவர் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி இருந்தால் பாகிஸ்தான் நிறைய ஓவர்கள் மீதம் வைத்து வென்று இருக்கும். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். இதற்கு மேல் ஒரு வீரரிடம் என்ன கேட்க முடியும்? ” என்று பாராட்டி கூறியிருக்கிறார்!