CT 2025: பயிற்சி போட்டிகள் அட்டவணை அறிவிப்பு.. இந்திய அணிக்கு ஒரு போட்டி கூட இல்லை.. காரணம் என்ன?

0
2844

8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்க விரும்பாததால், ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படவுள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கவுள்ளன. அதேபோல் ஒரு அரையிறுதி ஆட்டமும் துபாயில் நடக்கவுள்ளது.

இறுதிப்போட்டி நடக்கவுள்ள மைதானம் இந்திய அணியின் ஆட்டத்தை பொறுத்தே அமையும். இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றால், துபாயில் நடத்தப்படும் என்றும், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறவில்லை என்றால் லாகூரில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தான் சென்றுவிட்டன.

- Advertisement -

பயிற்சி ஆட்டம் அட்டவணை:

இன்னும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மட்டுமே பாகிஸ்தான் பயணிக்க வேண்டும். இந்திய அணி நாளை மறுநாள் ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க உள்ளது. இந்த நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டம் நாளை முதல் தொடங்கவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் அணி நிர்வாகம் தரப்பில் 3 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பாகிஸ்தான் ஷாகீன்ஸ் vs ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பிப்.14ஆம் தேதியும், நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்.16ஆம் தேதியும், பிப்.17ஆம் தேதி பாகிஸ்தான் ஷாகீன்ஸ் vs தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டமும், அதே நாளில் பாகிஸ்தான் ஷாகீன்ஸ் vs வங்கதேசம் இடையிலான ஆட்டமும் நடக்கவுள்ளது.

- Advertisement -

வேண்டாம் என மறுத்த இந்தியா:

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய அணி எந்த பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஏனென்றால் பிப்.15ஆம் தேதியன்றுதான் இந்திய அணி துபாய் சென்று சேரவுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு ஓய்வளிக்கும் வகையில் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்திய அணி பிப்.20ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதன்பின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பிப்.23ஆம் தேதியும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாடவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி பயிற்சி மேற்கொள்ள உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை 5 போட்டிகள் கொண்ட ஆட்டம் தான். ஒவ்வொரு அணியும் இறுதிப்போட்டி உட்பட 5 போட்டிகளில் விளையாட முடியும். இதனால் இந்திய அணியால் எளிதாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா விலகியதால், அவரது இடத்தில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -