இந்தியா வங்கதேச போட்டியால் புது சர்ச்சை.. ஐசிசியிடம் புகார் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு.. நடந்தது என்ன.?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவும், வங்கதேசம் அணிகள் மோதிய ஆட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்திருக்கிறது. இதனால் கடுப்பான பாகிஸ்தான் உடனடியாக ஐசிசி இடம் புகார் அளித்திருக்கிறது.

- Advertisement -

எப்படி படையப்பா திரைப்படத்தில், மாப்பிள்ளை இவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் டிரஸ் என்னது என ரஜினி செந்தில் பார்த்து சொல்வாரோ, அதேபோல்தான் போட்டிகள் துபாயில் நடந்தாலும் அதை நடத்துவது நாங்க தான் என பாகிஸ்தான் சொல்லி வருகிறது.

பாகிஸ்தான் பெயர் இல்லை:

ஹைபிரிட் மாடல் முறைப்படி நடைபெறும் இந்த போட்டிக்கு ஆரம்பம் முதலே பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த சூழலில் ஐசிசி கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பு படும்போது போட்டியை எந்த நாடு நடத்துகிறதோ அதனுடைய பெயர் லோகோ வில் ஸ்கிரீனில் இடது புறம் மேலே இடம்பெற்றிருக்கும்.

இப்படித்தான் பாகிஸ்தான் நியூசிலாந்து மோதிய முதல் லீக் ஆட்டத்திலும், தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது லீக் ஆட்டத்திலும், பாகிஸ்தான் பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால் துபாயில் நடைபெற்ற இந்தியா, வங்கதேசம் இடையிலான போட்டியை ஒளிபரப்பு படும்போது பாகிஸ்தானின் பெயர் அந்த லோகோவில் இடம்பெறவில்லை.

- Advertisement -

ஐசிசி அளித்துள்ள விளக்கம்:

இதற்கு தான் தற்போது பாகிஸ்தான் கடும் கோபத்தில் இருக்கிறது.இது தொடர்பாக ஐசிசி இடம் புகார் தெரிவித்து இருக்கிறது. போட்டிகள் துபாயில் நடைபெறுவதால் பாகிஸ்தான் என பெயரை தொலைக்காட்சி நிறுவனம் விட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது.ஆனால் தற்போது ஐசிசி ஒரு புதிய விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறது.

இதையும் படிங்க – 81 ரன் 43 பந்து எல்லீஸ் பெர்ரி அதிரடி வீண்.. எம்ஐ கேப்டன் பொறுப்பான ஆட்டம்.. 4 விக்கெட்டில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது

அதன்படி தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக தான் பாகிஸ்தானின் பெயர் ஐசிசி லோகோவின் இடம் பெறவில்லை என்றும், இனி துபாயில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் பெயர் இடம்பெறுவதை தொலைக்காட்சி நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தாங்கள் அறிவுறுத்தி இருப்பதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.அடுத்ததாக இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் மோதுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் பெயர் லோகோவின் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

- Advertisement -
Published by