சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் தொடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது.
50 ஓவர் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என இரண்டு பட்டத்தையும் தற்போது வென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்று சாதனை படைக்கும் உத்வேகத்தில் இருக்கிறது.
மிட்செல் மார்ஷ்க்கு காயம்:
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் மிகவும் முக்கியமான ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக சாம்பியன் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் 7 இன்னிங்ஸில் விளையாடிய மிட்செல் மார்ஷ் மொத்தமாகவே 73 ரன்கள் தான் சேர்த்தார்.
இதன் காரணமாக டெஸ்ட் அணையில் தன்னுடைய இடத்தை மிட்செல் மார்ஷ் இழந்தார்.இந்த நிலையில் மிட்செல் மார்ஷ் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த காயம் நினைத்ததை விட தீவிரமாக இருப்பதால் அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.
லக்கோ அணிக்கும் பின்னடைவு :
இந்த தொடருக்கு முன்பு நிச்சயமாக காயத்திலிருந்து மீண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அது பலன் அளிக்கவில்லை என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறி இருக்கிறது. மேலும் நிச்சயமாக காயம் குணமாகுவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்றும் எதற்காக நீண்ட நெடிய பயணத்தில் மார்ஷ் ஈடுபட உள்ளதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியிருக்கிறது.
மாற்று யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. மிட்செல் மார்ஷ், ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டன் ஆகவும் ஒரு நாள் அணியில் தற்காலிக கேப்டனாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் மார்ஷ்க்கு பதில் ஜேக் பிரேசர் உள்ளிட்ட வீரர்கள் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. இதனிடையே, கடந்த மெகா ஏலத்தில் லக்னோ அணி மூன்று கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தது. இந்த சூழலில் மார்ஷ், ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.






