கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் விதமாக ஒரு அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சாம்பியன் பட்டம் வென்ற டி20 அணிகள் பங்குபெறும் டி20 சாம்பிள் தொடர் மீண்டும் நடைபெற இருக்கின்றது.
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த தொடரை நடத்த ஐசிசி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்துவது குறித்து பேசப்பட்டது.
சாம்பியன்ஸ் லீக் டி20:
இந்த தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2014 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. அதன் பிறகு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை என இந்த தொடர் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் டி20 தொடர் மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவில் பிக் பாஸ் லீக் தொடர், இந்தியாவில் ஐபிஎல் தொடர், தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ டி20 தொடர், இங்கிலாந்தில் தி 100 தொடர் என ஒவ்வொரு நாடும் தொடரை நடத்தி வருகிறது.
இதில் வெற்றி பெறும் அணிகளை வைத்து சாம்பியன்ஸ் லீக் தொடரை நடத்துவது தான் தற்போது காலத்திற்கு ஏற்ற ஒரு மாற்றமாக இருக்கும் என ஐசிசி உறுப்பினர்கள் நம்புகின்றனர். இதேபோன்று 2027 ஆம் ஆண்டு பிறகு சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை முற்றிலும் மாற்றம் செய்ய ஐசிசி முடிவு எடுத்திருக்கிறது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சில அணிகள் மட்டுமே வருவாய் ஈட்டுகிறது. மேலும் பல அணிகள் டெஸ்ட் போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்பு இல்லாததால் இதுவும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: இவரை பார்த்து இங்கிலாந்து அணி பயப்படுது.. அவரை சுதந்திரமா ஆட இந்திய அணி விடணும் – சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து
அதன்படி இந்தியா ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகள் பங்கு பெறும். டெஸ்ட் சைக்கிளில் கீழ் வரிசையில் உள்ள பலம் குன்றிய அணிகளுக்கு தனியாக ஒரு சைக்கிளும் அமைக்கப்பட உள்ளது. இதில் முதல் சைக்கிள் குறைவான புள்ளிகளை பெறும் அணிகள் அடுத்த சைக்கிளுக்கு தரம் குறைக்கப்படும். இப்படி ஒரு அட்டவணையை உருவாக்க icc முடிவெடுத்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் டி20 தொடர் நடைபெறுவதை ஒட்டி அதற்கு அட்டவணையில் இடம் கொடுக்கும் வகையில் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.






