இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற சூழ்நிலையில் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் இங்கிலாந்து அணி பார்த்து பயப்படும் இந்திய பேட்ஸ்மேன் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
சுப்மான் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று சிறப்பான கம்பேக் கொடுத்தது. ஆனால் அதற்குப் பிறகு திரும்ப மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து தொடரில் பின்தங்கி இருக்கும் நிலையில் அடுத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் ரிஷப் பண்ட் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து தனது அபாரமான பார்மை வெளிப்படுத்தினார். அதற்குப் பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அரை சதம் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்த நிலையில் கடைசி இன்னிங்சில் 9 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணி பயப்படும் ஒரு பேட்ஸ்மேன் எனவும் அவர் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்றால் இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும் எனவும் சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.
பயப்படும் ஒரு பேட்ஸ்மேன்
இதுகுறித்து அவர் கூறும் போது “ரிஷப் பண்ட் எந்த சூழ்நிலையில் களம் இறங்கினாலும் அவர் தனது விருப்பத்திற்கு தகுந்தவாறு விளையாடுவார். அதற்கான உரிமத்தை அவர் பெற வேண்டும். ஏனென்றால் அவர் அதற்கு மிகவும் தகுதியான ஒரு வீரர். இந்திய அணியின் பேட்டிங் யூனிட் சிறப்பாக செயல்பட வேண்டும். இதில் குறிப்பாக ஜெய்ஸ்வால் எப்படி அவுட் ஆகிறார் என்று குறித்து சிந்திக்க வேண்டும். அவர் தனது பேட்டிங் ஃபார்மை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:களத்தில் 22 ரோபோக்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறீங்களா? ஐசிசிக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் கண்டனம்
ரிஷப் பண்ட் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கும் ஒரு வீரர். அந்த இடத்தில் களமிறங்கும் அவர் ஒரு பெரிய பேட்ஸ்மேன். மேலும் இங்கிலாந்து அணி பயப்படக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் அவர் இருக்கிறார்” என சஞ்சய் கூறுகிறார். இந்திய அணி தொடரில் வெல்ல வேண்டும் என்றால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயமான ஒன்றாக உள்ளது. எனவே இதனை இந்திய அணி செய்யுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






