52 மாதங்கள்.. கம்பீருக்கு பிசிசிஐ கொடுத்த அசைன்மென்ட்.. உலக கோப்பையை தாண்டிய சவால்கள்.. சாதிப்பாரா?

0
240
Gambhir

இந்திய கிரிக்கெட் வாரியம் சில நாட்களுக்கு முன்பாக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமித்தது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் வாரியத்தின் அணிக்கு மிக முக்கிய பொறுப்புக்கு கம்பீர் வந்திருக்கின்ற காரணத்தினால், அவர் முன்னால் இருக்கும் பெரிய சவால்கள் குறித்து பார்க்கலாம்.

இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் இன்னும் 3 1/2 ஆண்டுகள் தலைமை பயிற்சியாளர் பதவியில் தொடர்வார். அவருக்கு மூன்று வடிவத்திலான உலகக்கோப்பை தொடர்கள் காத்திருக்கிறது. மேலும் இந்தக் காலகட்டத்தில் இந்தியா வேறு சில முக்கிய தொடர்களிலும் விளையாட இருக்கிறது.

- Advertisement -

தற்போது இந்திய அணிக்கு 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, அதே ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்று வெல்வது, மேலும் இந்த ஆண்டு இறுதியில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா சென்று விளையாடுவது என முக்கிய தொடர்கள் இருக்கின்றன.

இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை தொடர் நடக்கிறது. இது ஆண்டில் இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும். இதற்கு அடுத்து இந்தியா 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும். கம்பீர் முன்னாள் இருக்கும் மிகப்பெரிய தொடர்களாக இவை இருக்கின்றன.

அதே சமயத்தில் இவற்றை வெல்வதை விட மிக முக்கியமாக மாறிவரும் கிரிக்கெட்டுக்கு ஏற்றபடி மூன்று வடிவிலான அணிகளையும் உருவாக்க வேண்டிய கட்டாயம் கம்பீருக்கு இருக்கிறது. இங்கிலாந்து இதற்கு முன்மாதிரியாக மூன்று வடிவத்திற்கும் தனி அணிகளை உருவாக்கி இருக்கிறது. இதுதான் கம்பீர் முன்னால் இருக்கும் பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : பயிற்சியாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட ஷாகின் அப்ரிடி.. கேரி கிரிஸ்டன் புகார்.. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பரபரப்பு

ராகுல் டிராவிட் பயிற்சி காலத்தில் நிறைய இளம் வீரர்கள் உள்ளே கொண்டுவரப்பட்டார்கள். மேலும் கம்பீர் காலத்திலும் இளம் வீரர்கள் வருவார்கள். ஆனால் ராகுல் டிராவிட் காலத்தில் இல்லாதது போல, கம்பீர் காலத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி வெளியே செல்வார்கள். எனவே இவர்களது இடத்திற்கு மாற்று வீரர்களை உருவாக்குவதும், மேலும் மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட்டுக்கும் தனித்தனி வீரர்களை உள்ளடக்கிய அணிகளை உருவாக்குவதும் அவர் முன்னால் இருக்கும் பெரிய சவால் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதில் அவர் எவ்வளவு சாதிப்பார்? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!