பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் தோல்விக்கு பிறகு ஏற்பட்ட சூறாவளிஇன்னும் தொடர்கிறது. தற்போது அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி பயிற்சியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளி வருகின்றன.
இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் படுதோல்வி அடைந்த காரணத்தினால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்பு ஷாகின் ஷா அப்ரிடி பாகிஸ்தான் வெள்ளை பந்து கிரிக்கெட் அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். பிறகு டி20 உலகக் கோப்பை நெருங்க மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக கொண்டுவரப்பட்டு ஷாகின் ஷா அப்ரிடி புறக்கணிக்கப்பட்டார்.
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து என இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பாபர் அசாம் தலைமையில் டி20 தொடர்களில் விளையாடியது.இந்தத் தொடரின் போது பாகிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரரான அசார் மக்மூத்திடம் ஷாகின் அப்ரிடி கடுமையாக நடந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கிறது.
மேலும் டி20 உலக கோப்பை தொடரின் பொழுது அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் இடம் கிரிக்கெட் ஒழுக்க விதிகளை மீறி கடுமையாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து கேரி கிறிஸ்டின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் மேனேஜர்கள் விசாரித்த பொழுதும் தண்டனை ஏதும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வெளியாகி இருக்கும் செய்தியில் “சமீபத்திய பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் சுற்றுப்பயணங்களில் ஷாகின் அப்ரிடி அணியின் பயிற்சியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் அவரின் இந்த மோசமான நடவடிக்கைகளுக்கு அணி மேனேஜர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையும் படிங்க : இனி அந்த இடம் கம்பீருக்குதான்.. கோலி ஆதிக்கம் முடிந்தது.. ஓபனா சொல்ல கஷ்டமா இருக்கு – டேல் ஸ்டெய்ன் பேட்டி
தனி லாபிகளை வைத்திருக்கும் வீரர்கள் அதனால் அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக விசாரித்து வருகிறது. சமீபத்திய பாகிஸ்தான் அணியின் சுற்றுப்பயணங்களில் வீரர்களின் தீவிரத் தன்மை இல்லாதது மற்றும் ஒருங்கீனமாக நடந்து கொண்டது குறித்து பயிற்சியாளர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரிடம் புகார் செய்திருக்கிறார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது” என்று கூறப்பட்டிருக்கிறது






