சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் சென்னை அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற விதம் குறித்து சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சிஎஸ்கே சிறப்பான வெற்றி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியின் சிறப்பான சுழற் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மும்பை அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் திலக் வர்மா 31 ரன்கள் குவித்தார். கேப்டன் சூரியகுமார் யாதவ் 29 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சென்னை அணித்தரப்பில் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமது 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட, கேப்டன் ருத்ராஜ் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 53 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு சென்னை அணி எதிர்ப்பாராத விதமாக விக்கெட்டுகளை வரிசையாக இழக்க, தொடக்க வீரர் ரச்சின் நிலையாக நிலைத்து நின்று கடைசி வரை விளையாடி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக அவர் 45 பந்துகளில் 65 ரன்கள் குவித்ததால் சென்னை அணி ஐந்து பந்துகள் மீதம் வைத்து 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத்தான் நாங்கள் விரும்பினோம்
இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் வெற்றி குறித்து கேப்டன் ருத்ராஜ் பேசும்போது ” வெற்றி பெற்ற அணியில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்றாகும். ஆனால் இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் மருத்துவ ரீதியாகவும் நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆட்டம் சில நேரங்களில் இப்படித்தான் செல்லும். அணிக்குத் தேவையான சமநிலையை வழங்குவதால் நான் மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்ய களம் இறங்கினேன். மேலும் எனது நிலையை மாற்றுவதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் சுழற் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டனர்.
இதையும் படிங்க:தோனி பாய் இருக்கிறதே எனக்கு போதும்.. அவ செஞ்ச அந்த விஷயம் இந்த உலகத்திலேயே இல்ல – நூர் அஹமத் பேச்சு
ஏலத்திற்கு பிறகு அந்த மூன்று பேரும் ( அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது) சேப்பாக்கம் மைதானத்தில் பந்து வீசினர் என்பது அற்புதமாக இருக்கிறது. கலீல் அகமது அனுபவம் வாய்ந்தவர். நூர் ஒரு முக்கியமான நபர் அவரை அணியில் சேர்க்க விரும்பினோம். மேலும் அஸ்வினும் எங்கள் அணியில் இருந்தால் மிகவும் நல்லது. மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு மிகவும் பிட் ஆக இருக்கிறார். தோனி இன்னும் இளமையாகத் தெரிகிறார்” என்று கேப்டன் பேசி இருக்கிறார்.