ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியில் நான்கு நட்சத்திர ஆட்டக்காரர்கள் வெளியேறிய நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் திட்டம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நாளை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளது. ஐசிசி தொடரை பொருத்தவரை வலுவான அணியாக திகழும் ஆஸ்திரேலியா அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் மோசமான ரெக்கார்டுகளை வைத்திருக்கிறது. 2013 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடரில் ஆஸ்திரேலியா அணி இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது நடைபெற்று வரும் தொடரில் ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ், ஹாஸில் வுட், மிட்சல் ஸ்டார்க் மற்றும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்டாய்னிஸ் ஆகியோர் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் இளம் வீரர்களைக் கொண்ட ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்கிறார். இந்த சூழ்நிலையில் நாளை நடைபெறும் ஆட்டம் குறித்தும் மற்றும் இந்த தொடர் குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் திட்டம் என்ன என்பது குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
எங்கள் திட்டம் இதுதான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் இந்த தொடரை பொறுத்திருந்து விளையாட முயற்சிக்கிறோம். இது தொடர் முழுவதும் ஆஸ்திரேலியா அணி சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாடும் திட்டத்தை வைத்திருக்கிறது. ஒரு போட்டியில் நான் மூன்றாவது வரிசையில் களமிறங்கலாம், மற்றொரு போட்டியில் நான்காவது வரிசையில் களம் இறங்கலாம். நாம் என்ன செய்ய விரும்புகிறோம் எந்த இலக்கை அடைய முயற்சிக்கிறோம், எங்கு வெற்றி பெற விரும்புகிறோம் என்பதை பொறுத்து முதல் பேட்டிங் செய்வதும் இரண்டாவது பேட்டிங் செய்வதும் விஷயங்கள் மாறக்கூடும்.
இதையும் படிங்க:கில் விளையாடும் விதமும் கார் ஓட்டுவதும் ஒன்றுதான்.. அதை இப்படி கம்பேர் செய்யலாம் – பாக் பசித் அலி பேட்டி
இந்தத் தொடரை பொறுத்தவரை இரண்டாவது பகுதியில் பனி முக்கிய பங்காக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. பின்பகுதி ஆட்டத்தை இன்னும் அதிகமாக விரிவாக்கலாம் என்று நினைத்தால் கூட பனி இந்தத் தொடரில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனவே சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாடி இந்தத் தொடரில் வெற்றி பெற முயற்சிப்போம்” என்று ஸ்மித் பேசியிருக்கிறார். ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமாக இருக்கும் நிலையில், நட்சத்திர வீரர்கள் வெளியேறி இருந்தால் கூட அந்த அணியின் போராட்ட குணம் தொடர் முழுவதும் இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியா அணி முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.






