இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் பயிற்சியாளர் கம்பீர் பாரபட்சம் காட்டுகிறார் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து ஒரு நாள் தொடரில் காயமடைந்து வாஷிங்டன் சுந்தர் வெளியேறினார். இவருடைய இடத்திற்கு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடும் டெல்லி மாநில வீரர் ஆயுஸ் பதோனி தேர்வு செய்யப்பட்டார். தற்போது இதுதான் பிரச்சினையாக மாறி இருக்கிறது.
எங்கு தவறு நடந்தது?
இதற்கு முன்பாக ஒரு ஆப் ஸ்பின் பகுதி நேர பேட்டிங் ஆல் ரவுண்டர் இடத்திற்கு ரியான் பராக் இந்திய அணி நிர்வாகத்தால் உள்ளே கொண்டுவரப்பட்டார். ஆனால் அவர் காயமடைந்து வெளியே சென்ற பிறகு வாஷிங்டன் சுந்தர் நல்ல முறையில் பேட்டிங் செய்ய அந்த இடத்திற்கு அவரையே வைத்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்திருக்கும் போது ரியான் பராக் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒருநாள் வடிவத்தில் பெரிய அளவில் செயல்பட்டு இருக்காத ஆயுஸ் பதோனியை கொண்டு வந்தது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
கம்பீர்தான் காரணம்
இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “ஆயுஸ் பதோனி, நிதீஷ் குமார் ரெட்டி, ருதுராஜ், அக்சர் படேல் இந்த நான்கு பேரில் எந்த இரண்டு பேர் அணியில் இருந்திருக்க வேண்டும்? என நீங்களே சொல்லுங்கள். கம்பீர் லக்னோ அணிக்கு மெண்டராக இருந்த பொழுது அந்த அணியில் ஆயுஸ் பதோனி இருந்தார். அதுதான் தற்போது அவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு காரணம். வேறு என்ன காரணம் இருந்து விட முடியும்?”
இதையும் படிங்க : 284 ரன்.. தனியாளாய் போராடிய கேஎல் ராகுல் ஸ்பெஷல் சாதனை.. கில் நம்பிக்கை பலிக்குமா? சுதாரித்த இந்திய அணி
“இது என்ன ஒரு குப்பையான முடிவு? உங்களுக்கு ஒரு ஆல் ரவுண்டர் தேவைப்படும் என்றால் அக்சர் படேலை கொண்டு வாருங்கள். அவர் எல்லா வடிவத்திலும் உண்மையான ஒரு ஆல்ரவுண்டர். ஐபிஎல் தொடரை வைத்து நீங்கள் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு வீரர்களை தேர்வு செய்ய முடியாது” என்று கூறி இருக்கிறார்.






