பாகிஸ்தான் நாட்டிற்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சென்ற பங்களாதேஷ் அணி, அந்தத் தொடரை முழுமையாக கைப்பற்றி பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
பங்களாதேஷ் அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு அங்கீகாரம் பெற்று இந்த 24 ஆண்டுகளில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தியதோடு முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தி இருக்கிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் வெற்றி
பங்களாதேஷ் அணி முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் சுழல் வந்து வீச்சாளரான மெஹதி ஹஸன் மிராஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். இதற்கடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியிலும் மெஹதி ஹஸன் மிராஸ் பேட்டிங் மற்றும் பங்குவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.
இந்த வெற்றி குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறும்பொழுது “இந்த வெற்றிக்கு நிறைய அர்த்தம் இருக்கிறது. இதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் வேலை செய்த விதத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் வேகப்பந்துவீச்சாளர்களின் பணி செயல்முறை மிகவும் சிறப்பாக இருந்தது. இதன் காரணமாகவே நாங்கள் வெற்றி அடைந்தோம். எங்கள் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கு நேர்மையாக உழைத்தார்கள்” என்று கூறி இருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்த வெற்றி மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. அடுத்து இந்திய அணிக்கு எதிரான தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியம். முஸ்பிகுர் ரஹீம் மற்றும் ஷாகிப் இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். இவர்களது அனுபவம் இந்தியாவில் முக்கியமானதாக இருக்கும். மெஹதி ஹசன் மிராஸ் இந்த சூழ்நிலையில் 5 விக்கெட் கைப்பற்றியது சுவாரசியமாக இருந்தது. மேலும் இந்திய அணிக்கு எதிராகவும் அவர் இதையே செய்வார் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க : 2-0 பங்களாதேஷிடம் தோல்வி.. ஏமாற்றத்தை தாங்க முடியல.. கதை மாறவே இல்ல – பாகிஸ்தான் கேப்டன் வருத்தம்
மேலும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் அணியில் இருந்தவர்களும் அணியின் வெற்றிக்காக சிறந்த பங்களிப்பை எடுத்துக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் அணியின் வெற்றிக்கு நல்ல முயற்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த கலாச்சாரம் அணியில் எப்பொழுதும் தொடரும் என்று நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.