2-0 பங்களாதேஷிடம் தோல்வி.. ஏமாற்றத்தை தாங்க முடியல.. கதை மாறவே இல்ல – பாகிஸ்தான் கேப்டன் வருத்தம்

0
618
Masood

பாகிஸ்தான் அணி சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என இழந்தது.

மேலும் பங்களாதேஷ் அணி 2000ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அங்கீகாரம் பெற்றதில் இருந்து இதுவரையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரையும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதன் சொந்த நாட்டிலேயே வைத்து கைப்பற்றி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இரண்டாவது டெஸ்டில் தோல்வி

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்த பொழுதும் அதை அந்த அணி பயன்படுத்திக் கொள்ளவில்லை. இறுதியாக 272 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதே சமயத்தில் பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 26 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்த பொழுது அதையும் பயன்படுத்தி கொள்ளவில்லை. அந்த அணியை 262 ரன்கள் எடுக்கவிட்டது.

மேலும் இரண்டாவது எண்ணின் செல் மோசமாக விளையாடி 172 ரன்களுக்கு சுருண்டது. இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் அணி 185 ரன்கள் இலக்கை நான்கு விக்கெட் இழப்புக்கு எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

- Advertisement -

பாகிஸ்தான் கேப்டன் வேதனை

இந்த டெஸ்ட் தொடரை பொறுத்தவரையில் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் இரண்டு அரைசதங்கள் அடித்து ஓரளவுக்கு நல்ல முறையில் பேட்டிங் செய்திருந்தார்.தேவையான நேரத்தில் சரியான முறையில் ஒருங்கிணைந்து விளையாடாத காரணத்தினால் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து பேசி இருக்கும் ஷான் மசூத் “இந்த தோல்வியில் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைகிறோம். எங்களுடைய ஹோம் கண்டிஷனில் டெஸ்ட் தொடர் விளையாடுவதற்கு நாங்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தோம். ஆனால் கதை என்னவோ எங்களுக்கு கடைசியில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் என்ன நடந்ததோ அதுவேதான் நடந்திருக்கிறது.

இதையும் படிங்க : 24 வருடம்.. வரலாறு படைத்த பங்களாதேஷ் அணி.. பாகிஸ்தானுக்கு சொந்த மண்ணில் சோகம்.. தொடரை இழந்தது

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தோல்வியில் நாங்கள் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். இந்த முறை அதையெல்லாம் மாற்றி சிறப்பாக செயல்படுவது குறித்து நாங்கள் பேசிக் கொண்டோம். ஆனால் நாங்கள் நினைத்தபடி எங்களால் செயல்பட முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் அதற்கு வேறொரு வகையில் உடல் தகுதி சிறப்பாக தேவைப்படுகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -