நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா சில முக்கியமான விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. அந்த அணியில் விராட் கோலி 42 பந்துகளில் 67 ரன்கள் மற்றும் கேப்டன் ராஜத் பட்டிதார் 32 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கியது. டாப் ஆர்டர் சரியாக விளையாடவில்லை என்றாலும் மிடில் வரிசை பேட்ஸ்மேன்களான திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் திலக் வர்மா 56 ரன்கள் மற்றும் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க 15 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது.
இந்த தோல்வி குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் போது ” இந்தப் போட்டி ஒரு ரன் விருந்தாகும், ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. மீண்டும் இரண்டு ஹிட் ஷாட்கள் அடித்து இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். 221 ரன்கள் சமமாக இருந்ததா அல்லது அதற்கு மேல் இருந்ததா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் உண்மையில் பந்துவீச்சாளர்களுக்கு இங்கு மறைக்க எதுவும் இருக்காது. இது போன்ற ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களிடம் கடுமையாக இருக்க முடியாது. நமன் எப்போதும் ஆட்டத்தின் கீழே பேட்டிங் செய்து கொண்டிருந்தார். கடந்த ஆட்டத்தில் ரோஹித் இல்லாததால் அவர் பேட்டிங் வரிசையில் மேலே வந்தார்.
இதையும் படிங்க:221 ரன்.. ஆர்சிபிக்கு தோல்வி பயத்தை காட்டிய பாண்டியா திலக் வர்மா.. 12 ரன்னில் மும்பை இந்தியன்ஸ் போராடி தோல்வி.. ஐபிஎல் 2025
அவரால் அற்புதமாக சில விஷயங்கள் செய்ய முடியும் என்று தெரியும். திலுக் வர்மா இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார். கடந்த போட்டியில் அவருக்கு என்ன விஷயங்கள் நடந்தது என்று தெரியும். மக்கள் அதைப் பற்றி நிறைய விஷயங்கள் கூறினார்கள். ஆனால் அதற்கு முந்தைய நாள் அவருக்கு மோசமான நாளாக என்று மக்களுக்குத் தெரியாது. அவர் சற்று தடுமாறிய போது புதிய ஒருவர் போட்டியின் இறுதியில் சிறப்பாக விளையாட முடியும் என்று பயிற்சியாளர் நினைத்தார். இந்தப் போட்டியில் பவர் பிளே மிகவும் முக்கியமானவை. போட்டியின் நடுவில் எங்களால் மீண்டு வர முடியாமல் போனது. அதனால்தான் வெற்றிப் பாதைக்கு எங்களால் திரும்ப முடியவில்லை. பும்ரா இந்த போட்டியில் அற்புதமாக செயல்பட்டார். அவர் கிடைத்திருப்பது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி. வாழ்க்கையில் ஒருபோதும் பின்வாங்காதீர்கள், எப்போதும் நேர்மையான பக்கத்தை பாருங்கள். எனவே மீண்டும் சிறப்பான வழியில் திரும்பவும் என்ற நம்புகிறோம்” என பாண்டியா பேசியிருக்கிறார்.






