நேற்றைய போட்டியில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் கில் உடைய கேப்டன்சி குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் அணி தேர்வு குறித்தும் கம்பீர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இரு அணிகளுக்கும் இடையே துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்து 471 ரன்கள் குவித்தது. 430 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி அங்கு இருந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி ரன் குவித்திருந்தாலும் இது கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.
முதல் டெஸ்ட் போட்டிக்கு சர்துல் தாகூரை தேர்வு செய்ததற்கு பதிலாக முழுமையான வேகப் பந்துவீச்சாளர் அர்ஸ் தீப் சிங்கை தேர்வு செய்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இங்கிலாந்தில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் சர்துல் தாகூர் பெரிய அளவில் பந்துவீச்சில் தாக்கத்தை செலுத்த முடியவில்லை. மேலும் அவர் பேட்டிங்கில் உறுதியாக பங்களிப்பு கொடுப்பாரா? என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறது.
இதன் காரணமாக பேட்டிங் வரிசையை ஏழு வரையில் பலமாக வைத்துக் கொண்டு, நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை விளையாடுவதுதான் இங்கிலாந்து அணியை வெற்றி பெறுவதற்கான ஒரே வழியாக இருக்கும் என கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நேற்று இந்திய அணி ஆல் அவுட் ஆன பிறகு பந்து வீச்சுக்கு சாதகமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த சூழ்நிலையில் முதல் பெல்லில் சிராஜ் நல்ல முறையில் இல்லை. ஆனால் பந்து ஸ்விங் ஆகக்கூடிய சூழ்நிலையில் இருந்தது. இதை பயன்படுத்தி பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்யக்கூடிய சர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கேப்டன் கில் அப்படி செய்யவில்லை.
இதையும் படிங்க: கம்பீர் செஞ்ச அந்த வேலைதான்.. ரிஷப் பண்ட் ஆட்டம் இழக்க முக்கிய காரணம்.. இதை செய்யாதீங்க – தினேஷ் கார்த்திக் கருத்து
இது மட்டும் இல்லாமல் நான்காவது பந்து வீச்சாளராக பந்து வீச்சுக்கு சர்துல் தாகூரை அழைக்காமல் ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் வில் கொண்டு வந்தார். மேலும் 40 ஓவர்கள் பந்து வீசி முடிக்கப்பட்ட பிறகு தான் சர்துல் தாக்கூருக்கு பந்து வீசுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஆடுகளம் முழுவதுமாக பேட்டிங் செய்ய சாதகமாக மாறிவிட்டது. இதனால் கையில் இருந்த ஒரு நல்ல வாய்ப்பை கில் வீணடித்து விட்டார். மேலும் 40 ஓவர்கள் கழித்து தான் பந்து வீச்சுக்கு அழைக்க முடிந்த அளவுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் அவரை ஏன் தேர்வு செய்ய வேண்டும்? என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.