கம்பீர் செஞ்ச அந்த வேலைதான்.. ரிஷப் பண்ட் ஆட்டம் இழக்க முக்கிய காரணம்.. இதை செய்யாதீங்க – தினேஷ் கார்த்திக் கருத்து

0
306

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணியின் ரிஷப் பண்ட் எதிர்பாராமல் ஆட்டம் இழந்த விதம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்த விதம்

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 471 ரன்கள் குவித்தது. நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் போட்டியில் கேப்டன் சுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 147 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதத்தை பதிவு செய்ததோடு 134 ரன்கள் குவித்த நிலையில் தனது ஆட்ட வேகத்தை குறைத்து ஆட்டம் இழந்தார்.

12 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் தனது அதிரடியை தொடங்கிக் கொண்டிருந்த நிலையில் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வந்த குறுந்தகவலால் அடுத்த 9 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. அவர் ஆட்டம் இழக்க ஒரு விதத்தில் காரணமாக அமைந்ததாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். அவர் ஆட்டம் இழந்த பிறகு இந்திய அணி 471 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் கருத்து

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் போது ” இந்த தகவல் சுவாரசியமானது, அவர் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தபோது ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வந்த குறுஞ்செய்தி அவரது ஆட்ட பாணியை கட்டுப்படுத்தியது. அவரது ஆட்ட பாணியில் மிகவும் கவலையற்றவராக சிறப்பான முறையில் விளையாடிகொண்டிருந்தார். ஆனால் அவரை அமைதிப்படுத்த சொல்லி ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வந்த ஒரு குறுஞ்செய்தி சில வீரர்களுக்கு வேலை செய்யாது.

இதையும் படிங்க:20.99.. பாகிஸ்தானின் பெருமை சாதனை தூள் தூள்.. SENA நாடுகளில் பறக்கும் பும்ரா கொடி.. மாஸ் ரெக்கார்டு

ஒரு பயிற்சியாளராக நீங்கள் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து ஒரு வீரருக்கு அனுப்பும் குறுஞ்செய்தி புரிந்து கொள்ளத்தக்கதாகும். ஆனால் சில வீரர்களுக்கு நீங்கள் எந்த செய்தியை எந்த தொனியில், எந்த மொழியில் அனுப்புகிறீர்கள் என்பதும் மிக முக்கியமான ஒன்றாகவும் அமைகிறது. அது வீரர்களிடமிருந்து சிறந்ததை வெளிக்கொணர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்” என அவர் பேசியிருக்கிறார்

- Advertisement -