சிஎஸ்கே தோல்விக்கு பழிய நான் ஏத்துக்கிறேன்.. இந்த முடிவோட போனேன் ஆனா செய்ய முடியல – தோனி பேச்சு

0
1356
Dhoni

இன்று சிஎஸ்கே அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் ஆர்சிபி அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது. இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து தோனி பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு ஜேக்கப் பெத்தேல் 33 பந்தில் 55 ரன்கள், விராட் கோலி 33 பந்தில் 62 ரன்கள், இறுதியில் அதிரடியாக விளையாடிய ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்டம் இழக்காமல் வெறும் 14 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

போராடி தோற்ற சிஎஸ்கே அணி

இந்த போட்டியில் பெரிய இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஆய்வு மத்ரே சிறப்பாக விளையாடி 48 பந்தில் 94 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இறுதிவரை களத்தில் நின்ற ரவிந்திர ஜடேஜா 45 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். இறுதியில் சிஎஸ்கே அணி வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில். 19ஆவது ஓவரில் சிஎஸ்கே 14 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து யாஸ் தயால் வீசிய 20வது ஓவரில் 12 ரன்கள் மட்டும் எடுத்து இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மீண்டும் ஒரு முறை யாஸ் தயால் சிஎஸ்கே அணிக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறார்.

- Advertisement -

பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன்

இந்த போட்டியில் தோல்வி குறித்து பேசி இருக்கும் தோனி கூறும் பொழுது “நான் பேட்டிங் சென்ற பொழுது, தேவையான பந்துகளுக்கு இரண்டு ஷாட்டை வெற்றிகரமாக ஆடி இருக்க வேண்டும். இந்த தோல்விக்கான பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த போட்டியில் ஆர்சிபிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. பிறகு நாங்கள் மீண்டும் திரும்பி வந்தோம். ஆனால் ஷெப்பர்ட் புத்திசாலியாக இருந்தார். எங்கள் பந்துவீச்சாளர்கள் எப்படி பந்து வீசினாலும் அவர் பெரிய ரன்கள் எடுத்தார்”

இதையும் படிங்க : 25 பந்து.. 7 போர்.. 2 சிக்ஸ்.. சிஎஸ்கே அணிக்காக முதல் வீரராக சாதனை படைத்த 17 வயது ஆயுஸ் மாத்ரெ.. ஐபிஎல் வரலாற்றில் 3வது வீரர்

“மாறிவரும் கிரிக்கெட்டில் பவுலர்கள் யார்க்கர் வீச கற்றுக் கொள்ள வேண்டும். பேட்ஸ்மேன்கள் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது வேறு வழி கிடையாது. அந்த பந்து தவறினாலும் லோ புல்டாஸ் ஆக அமையும். அதை எல்லா நேரத்திலும் அடித்து விட முடியாது. இன்று பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பெடல் ஷாட் ஆடுவதில்லை. ஆனால் ஜடேஜா அதை சிறப்பாக தரையில் விளையாடுகிறார். எனவே அதை நம்பி ஆதரித்து விளையாடினார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -