பதினெட்டாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி விளையாடி வருகின்றன.
இதில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் 17 வயது இளம் வயது தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரெ சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
பெங்களூர் சென்னை மோதல்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் களம் இறங்கியது. ஆர்சிபி அணியில் ஜேக்கப் பெத்தல் மற்றும் விராட் கோலி ஆகியோர் முதல் விக்கட்டுக்கு 9.5 ஓவர்களில் 97 ரன்கள் குவித்தார்கள். ஜேக்கப் பெத்தல் 55 ரன்கள் மற்றும் விராட் கோலி 33 பந்துகளில் 62 ரன்கள் குவித்து வெளியேறினார்கள்.
அதற்குப் பிறகு மிடில் வரிசை வீரர்கள் தடுமாற, இறுதிக்கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர் என 53 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.
17 வயது வீரர் சாதனை
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஆயுஸ் மாத்ரெ மற்றும் சேக் ரசீது ஆகியோர் சென்னை அணியின் இன்னிங்சை துவங்கினார்கள். இதில் ஷேக் ரசீது 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து வெளியேற, மற்றொரு துவக்க ஆட்டக்காரர் ஆயுஸ் மாத்ரெ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 போர் மற்றும் 2 சிக்சர் என 50 ரன்கள் குவித்து 17 வயதில் சிஎஸ்கே அணிக்காக அரை சதம் அடித்த முதல் வீரர் என்கிற சாதனையையும் படைத்தார்.
இதையும் படிங்க:14 பந்து.. 6 சிக்ஸ்.. 4 ஃபோர்.. ஆர்சிபி ஷெப்பர்ட் ருத்ரதாண்டவம்.. ஐபிஎல்-ல் மெகா சாதனை.. சிஎஸ்கே பரிதாபம்
இதற்கு முன்னதாக 14 வயது வீரரான ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த வைபவ் சூரியவன்சி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்த நிலையில் அவருக்கு அடுத்ததாக ரியான் பராக் 17 வருடம் 175 நாட்களில் ஐபிஎல் தொடரில் அரை சதம் அடித்தார். அவருக்கு அடுத்தது மூன்றாவது வீரராக தற்போது ஆயுஷ் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிஎஸ்கே அணியில் 21 வயது 148 நாட்களில் அரை சதம் அடித்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையையும் முறியடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






