பிரிவிஸ்க்கு அதுக்காக நன்றி சொல்லிக்கிறேன்.. டீம்ல இந்த விஷயத்தை பாக்கவே ஹேப்பிதான் – தோனி பேட்டி

0
534
Dhoni

இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சிஎஸ்கே பணியில் புதிதாக வந்த உர்வில் படேல் மற்றும் கான்வே இடம் பெற்றார்கள். சாம் கரன், ஷேக் ரஷீத் மற்றும் தீபக் ஹூடா நீக்கப்பட்டதுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

சவால் கொடுத்த கேகேஆர்

முதலில் பேட்டிங் செய்ய வந்த கேகேஆர் அணிக்கு கேப்டன் ரகானே 33 பந்துகளில் 48 ரன்கள், மனிஷ் பாண்டே 28 பந்தில் 36 ரன்கள், ரசல் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. நூர் அகமத் நான்கு விக்கெட் கைப்பற்றினார். இந்த வெற்றி குறித்து கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணி பவர் பிளேவில் 5 விக்கெட்டுகளை இழந்தது. புதிதாக வந்த உர்வில் படேல் 11 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் உடன் அதிரடியாக 31 ரன்கள் எடுத்தார். டிவால்ட் பிரிவிஸ் 25 பந்துகளில் 52 ரன்கள், சிவம் துபே 40 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே அணி 19.4 ஓவரில் 8 டிக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது வெற்றி பெற்றது.

- Advertisement -

பிரிவிஸ்க்கு நன்றி

இந்த வெற்றி குறித்து பேசி உள்ள தோனி கூறும் பொழுது ” இந்த வெற்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு எங்களிடம் போட்டிகள் இருக்கிறது. எந்த பேட்டர்களை எந்த இடத்தில் களம் இறக்கினால் சரியாக இருக்கும்? யாரை எங்கு பந்து வீச வைத்தால் சரியாக இருக்கும்? என்று நாங்கள் பார்க்கிறோம். தற்போது எங்கள் பேட்ஸ்மேன்கள் நல்ல இண்டன்ட் காட்டி விளையாடுவது பார்க்க நன்றாக இருக்கிறது”

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. வெறும் 11 பந்துகளில் ஒட்டுமொத்த சிஎஸ்கே வீரர்களின் ரெக்கார்டை முறியடித்த புதுமுக வீரர்.. பவர் பிளேவில் அபாரம்.. CSK vs KKR

“நான் பிரிவிஸ்க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்தான் ஆட்டத்தை இறுதிவரை எடுத்துச் செல்வதற்கு தேவையான ரன் ரேட்டை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆடுகளத்தில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு உதவி இருந்தது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதுவும் பெரிதாக இல்லை. மேலும் நான் கடைசி பேட்டர் என்பதை மறந்து விடக்கூடாது. நான் ஆட்டம் இழந்தால் அது பெரிய பதட்டத்தை உருவாக்கி விடும். சிவம் துபேவுக்கு நடுவில் இரண்டு சிக்ஸர்கள் கிடைத்தது. எல்லாம் சேர்ந்து இறுதியாக நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -