கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 57வது லீக் போட்டி தற்போது நடைபெற்ற வருகிறது.
இதில் இன்றைய போட்டியில் வாய்ப்பு பெற்ற சிஎஸ்கே புதுமுக வீரர் உர்வில் பட்டேல் பவர் பிளேவில் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
கொல்கத்தா சென்னை மோதல்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய குர்பாஸ் 11 ரன் மற்றும் சுனில் நரேன் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்து வெளியேற, மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் கேப்டன் ரகானே 33 பந்துகளில் 48 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிக்கட்டத்தில் ரசல் 21 பந்துகளில் 4 போர் மற்றும் 3 சிக்சர் என 38 ரன்கள் குவிக்க 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. இதில் எதிர்பாராத விதமாக சென்னை அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே தனது இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் கான்வெ மொயின் அலியின் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் புதுமுக வீரராக களம் இறங்கிய உர்வில் பட்டேல் 11 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சாதனை படைத்த புதுமுக வீரர்
31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வைபவ் அரோராவின் பந்தில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். இருப்பினும் இந்த சீசனில் புதுமுக வீரர் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது இந்த சீசனில் பவர் பிளேவில் அதிக சிக்சர் அடித்த சிஎஸ்கே வீரராக உர்வில் பட்டேல் மாறி இருக்கிறார். வெறும் 11 பந்துகள் விளையாடிய நிலையில் 4 சிக்ஸர் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த பிளேயராக தற்போது இருக்கிறார்.
இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டில் விடைபெற்ற ரோஹித்.. பிசிசிஐ விரும்பும் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்.? வெளியான முக்கிய தகவல்
இதற்கு முன்னர் 17 வயது வீரர் ஆயுஷ் மாத்ரே 55 பந்துகளில் 3 சிக்சர் அடித்திருக்கிறார். அதேபோல மற்றொரு துவக்க வீரர் ஷேக் ரசீத் 60 பந்துகளில் 2 சிக்சர் அடித்திருக்கிறார். மேலும் கேப்டன் ருத்ராஜ் 44 பந்துகளில் 2 சிக்ஸர் ரவீந்திர ஜடேஜா 29 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ராகுல் திருப்பாதி 33 பந்துகளில் ஒரு சிக்சர் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






