இந்த மாதிரி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இலங்கை அணி விளையாட்டு இருக்க வேண்டும் எனவும், ஆனால் அடுத்த முறை இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெறும் எனவும் கேப்டன் தனஞ்செய டி சில்வா கூறியிருக்கிறார்.
மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது. இதற்கு அடுத்து சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இரண்டாவது அணியாக தகுதி பெற்றது. இங்கிலாந்து லார்ட்சில் நடந்த இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
நாங்க இருக்க வேண்டிய இடம் அது
கடந்த முறை இறுதிப் போட்டிக்கு வருவதற்கு இலங்கை அணிக்கும் ஒரு சிறிய வாய்ப்பு இருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, ஆஸ்திரேலியா அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி சொந்த மண்ணில் வீழ்த்தினால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்க முடியும். ஆனால் இரண்டு விஷயமுமே நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசி உள்ள தனஞ்செய டி சில்வா கூறும் பொழுது “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வருவதற்கு எங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது. துரதிஷ்டவசமாக எங்களால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நேற்று கூட எங்களுடைய அணி வீரர்களுடன் நான் பேசும் பொழுது லார்ட்ஸ் மைதானத்தில் நாம் விளையாடி இருக்க வேண்டும் என்று கூறினேன்”
இந்த முறை வாய்ப்பிருக்கு
” நாம் ஒரு புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளை ஆரம்பிக்கும் பொழுது, நம்முடைய சொந்த மண்ணில் விளையாடும் தொடரை வெல்ல வேண்டியது அவசியம் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் விளையாடும் தொடரை வென்று சிறப்பாக ஆரம்பிப்போம்”
இதையும் படிங்க : கில் சிங்கத்து வாயில தலைய வச்சுட்டார்.. அவருக்கு இன்னும் அந்த உண்மை என்னனு தெரியல – தினேஷ் கார்த்திக் பேச்சு
“நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். நாங்கள் சமீபத்தில் சிறந்த உள்நாட்டு முதல் தர தொடரை முடித்திருக்கிறோம். அதன் மூலம் நல்ல தயாரிப்பையும் பயிற்சியையும் பெற்றிருக்கிறோம். அந்தத் தொடரில் இருந்து திறமையுள்ள சில இளைஞர்களை கண்டுபிடித்திருக்கிறோம். அவர்களுடன் சேர்ந்து அடுத்த பயணத்தை தொடங்க விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.






