இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் சிங்கத்தின் குகைக்குள் நடந்து கொண்டிருக்கிறார் எனவும், அவர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்றும் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தினால் சுப்மன் கில் புதிய இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கேப்டனாக முதல் தொடரே இங்கிலாந்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அமைந்திருப்பது கடினமானதாக இருக்கிறது.
கில்லின் மோசமான புள்ளி விபரம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். அதே சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளும் பொழுது அவருக்கு ஆசியா தாண்டி நல்ல புள்ளி விபரங்கள் இல்லை. இவருடைய காலத்தில் வந்த இங்கிலாந்தின் ஹாரி புரூக் இங்கிலாந்து தாண்டி ஆசியா மன்னிலும் சதங்கள் அடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் கில் ஆசியா தாண்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் எதுவும் அடிக்கவில்லை. மேலும் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் கேப்டனாக பணியாற்றியதும் இல்லை. தற்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே இரண்டு ஆண்டுகளாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இதுவெல்லாம் அவருக்கு பின்னடைவான விஷயமாக பார்க்கப்படுகிறது.
கில் இதை உணரவில்லை
இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது “இப்போது கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் மகத்துவத்தை உணர்ந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. தற்போது அவர் சிங்கத்தின் குகைக்குள் நடந்து கொண்டிருக்கிறார். ஒரு கிரிக்கெட் தேசமாக இங்கிலாந்துக்கு விளையாட வருவது எளிதானது கிடையாது. பல சூப்பர் ஸ்டார்களை கொண்ட அணிகள் இங்கு விளையாட வந்திருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு இங்கு கிரிக்கெட் கடினமாகவே இருந்திருக்கிறது”
இதையும் படிங்க : சூரியவன்சி கொடூரமான பையன்.. என்னை நோகவச்சுட்டார்.. லாரா யுவராஜ் சிங் மாதிரி அடி – பட்லர் பேச்சு
“தற்போது கில்லுக்கு ஒரே அதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால் இங்கிலாந்தின் பவுலிங் யூனிட் பலவீனமாக இருப்பதுதான். இந்திய அணிக்கு தற்பொழுது நான் பார்க்கும் பாசிட்டிவான ஒரே விஷயம் இதுதான். இரண்டு அணிகளுமே தங்களுடைய பேட்டிங்கால் அழுத்தத்தை உருவாக்குவார்கள். ஆனால் இங்கிலாந்தின் பவுலிங் பலவீனமாகவே இருக்கிறது. எனவே இந்திய அணி நன்றாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.






