அனுபவம் இல்லாத பசங்க செய்தது உன்னால செய்ய முடியாதா? இங்கிலாந்து பவுலரை விட்டு வாங்கிய கவாஸ்கர்!

0
279
Gavaskar

நேற்று லக்னோ அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது!

பந்து வீச்சிற்குக் கொஞ்சம் ஒத்துழைப்பு தந்த லக்னோ ஆடுகளத்தில் மும்பை அணி லக்னோ அணியை 177 ரன்கள் அடிக்கவிட்டது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோர்டான் நான்கு ஓவர்களுக்கு 50 ரன்கள் கொடுத்து மும்பை அணிக்கு மிகப்பெரிய தலைவலியை உண்டாக்கி விட்டார்.

குறிப்பாக அவர் வீசிய நான்காவது மற்றும் ஆட்டத்தின் 18 வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என மார்க்கஸ்க்கு 24 ரன்கள் தந்தது மிக மோசமான செயல்பாடாக அமைந்தது.

இதுகுறித்து கவாஸ்கர் விமர்சிக்கும் பொழுது ” அது மிகப்பெரிய திருப்புமுனை. நீங்கள் 17 அல்லது 18 வது ஓவரை வீசுகிறீர்கள் என்றால், நீங்கள் அனுபவம் உள்ளவர் என்றால் உங்களுக்கு எங்கு வீச வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் எங்கு வீசினீர்கள்? அவர் ஸ்லாட்டில் வீசினார். அடுத்து சரியான உயரத்தில் ஒரு புல்டாஸ். பிறகு உள்வட்டத்தில் ஆட்களை வைத்துக்கொண்டு காலுக்கு வீசினார்.

- Advertisement -

அவரது செயல்பாட்டில் அனுபவம் தெரியவே இல்லை. அவர் தனது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தாக்க வீரர். அவர் இப்படி மோசமாக செயல்பட்டது முதல் முறையாக நடக்கவில்லை. இது அவருக்கு ஒவ்வொரு முறையும் நடந்துள்ளது. நாங்கள் இதை ஐபிஎல் மற்றும் இங்கிலாந்துக்கு அவர் பந்துவீசிய போதும் பார்த்திருக்கிறோம்.

ஐபிஎல் தொடரில் பத்துக்கு மேல் எக்கனாமி வைத்திருக்கும் ஒருவர் கையில் பந்தைக் கொடுத்தால் இது நடக்கும். இதனால் நீங்கள் 150 ரன்கள் பதிலாக 180 ரன்கள் துரத்த வேண்டியதாக அமைகிறது. அவர் பந்து புதிதாக இருக்கும் பொழுது இரண்டு ஓவர்கள் நன்றாக வீசுகிறார். ஆனால் கடைசிக்கட்டத்தில் சரியாக வீசுவது முக்கியம்.

இளைஞரான மோசின் கான் யார்க்கர்களை எவ்வளவு சிறப்பாக வீசினார். அவர் வேகத்தை மாற்றி மாற்றி வீசியதையும் பார்த்தோம். ஆகாஷ் மத்வால் அவர் சிறப்பாக வீசியதையும் பார்த்தோம். இவர்கள் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள். இவர்களால் செய்ய முடிந்ததை அனுபவம் இருந்த அவரால் ஏன் முடியவில்லை? உங்களுக்கு அனுபவம் இருக்கிறது மேலும் நீங்கள் விசேஷமாக அழைக்கப்பட்ட ஒருவர். இது மோசமான செயல்பாடு!” என்று கடுமையாகக் கூறியிருக்கிறார்!