விராட் கோலிக்கு வாழ்த்து சொல்ல காத்திருக்க முடியாது; பாகிஸ்தான் இளம் வீரர்; ட்விட்டர் இணைப்பு!

0
11303
Viratkohli

இந்திய கிரிக்கெட் என்பதைத் தாண்டி, உலக கிரிக்கெட்டில் தற்காலத்தில் மூன்று வடிவத்திலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஒருவர் இருக்கிறார் என்றால் அது விராட் கோலிதான்!

எந்த கிரிக்கெட் வடிவம் என்றாலும் அதற்கேற்றார் போல் விளையாடக்கூடிய திறமை கொண்ட ஒரே வீரராக தற்போது விராட் கோலிதான் இருக்கிறார். தேவைக்கு தகுந்தார் போல் இவர் ரன்களைக் கொண்டு வரும் முறையில் தற்போது யாருமே இல்லை!

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரிடம் இருந்து சதங்கள் வராமல் இருந்தது உண்மைதான், ஆனால் அவரிடமிருந்து அரை சதங்கள் வந்து கொண்டுதான் இருந்தது. அரை சதங்கள் வந்து சதம் வராத பொழுது ஒரு வீரர் ஃபார்மில் இல்லை என்ற பேச்சு எழுகிறது என்றால், அவர் அதற்கு முன்பு எந்த அளவிற்கு மிகச் சிறப்பாக விளையாடியிருப்பார் என்று புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு ஏற்பட்ட ஒரு சிறிய சரிவுக்கு முன், அவர் தனது எதிரணிகளுடன் சதத்தின் மூலம்தான் அதிகம் பேசிக் கொண்டிருந்தார்!

விராட் கோலி அதிக அளவில் மற்ற நாட்டு ரசிகர்களை தாண்டி மற்ற நாட்டு வீரர்களையும் ஈர்க்கக்கூடியவராக இருக்கிறார். இதற்கு மிக முக்கியமான காரணம் என்றால், அவர் கிரிக்கெட் புத்தகத்தில் இருக்கும் மரபான ஷாட்கள் தவிர, புதுவிதமான எந்த ஷாட்களையும் முயற்சி செய்ய மாட்டார். இத்தனைக்கும் மரபு ரீதியான, விக்கெட் ஆபத்து கொண்ட ஸ்வீப் ஷாட்டை கூட விளையாட மாட்டார். வழக்கமான கிரிக்கெட் ஷாட்களை கொண்டே எதிரணி பந்து வீச்சாளர்களை கதி கலங்க வைப்பார். அவரது இந்த திறமைதான் எதிரணி வீரர்களையும் அவர்பால் ஈர்த்து வைத்திருக்கிறது.

நாளை நவம்பர் ஐந்தாம் தேதி விராட் கோலி முப்பத்தி நான்காவது வயதில் அடி எடுத்து வைக்கிறார். இதற்கு அவருக்கு இந்தியா தாண்டி உலகம் எங்கும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா இன்று விளையாடிய போட்டி முடிந்ததும் அவரது ஐபிஎல் அணி வீரரான மேக்ஸ்வெல் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகபந்துவீச்சாளர் ஷாநவாஸ் தகாணி விராட் கோலிக்கு மிக அழகான வாழ்த்து ஒன்றை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர்
” கிரிக்கெட்டை மிகவும் அழகாக்கிய கலைஞருக்கு வாழ்த்து தெரிவிக்க நவம்பர் 5ஆம் தேதி வரை காத்திருக்க முடியவில்லை. எந்த காலத்திலும் சிறந்த வீரரான விராட் கோலிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது நாளை அனுபவிக்கவும் மற்றும் இந்த உலகை மகிழ்விக்கவும் வாழ்த்துக்கள் சகோதரரே!” என்று வாழ்த்தி பதிவிட்டு இருக்கிறார். இதற்கான ட்விட்டர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!