“ஷாமர் ஜோசப்பை சேர்க்கவும் முடியல.. விலக்கவும் முடியல.. பெரிய தலைவலி” வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி பேட்டி

0
926
Sammy

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் புதிய சூப்பர் ஸ்டார் ஆக 24 வயது வலது கை வேகப் பந்துவீச்சாளர் ஷாமர் ஜோசப் உருவாகி இருக்கிறார். அவரது அதிரடி பந்துவீச்சின் காரணமாக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி இருக்கிறது.

இந்த நிலையில் டெஸ்ட் தொடருக்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களது நாட்டில் விளையாடுகிறது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு, இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை அந்த அணிக்காக வென்ற டேரன் சமி புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்று வழி நடத்தி வருகிறார்.

தற்பொழுது தங்களது நாட்டில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையை வெல்வதை இலக்காக வைத்து, இவரது பயிற்சியின் கீழ் வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் அணி மிகச் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு விளையாடி வருகிறது.

இந்த நிலையில் தங்களுடைய திட்டத்தில் ஷாமர் ஜோசப் புதிய தலைவலியை உண்டாக்கி இருப்பதாக புகழ்ந்து பேசி இருக்கிறார். 68 ரன்களுக்கு 7 விக்கெட் என்கின்ற அற்புதமான பந்துவீச்சின் மூலம் அசத்திய அவரை, வெஸ்ட் இண்டீஸ் வெள்ளைப்பந்து அணிகளுக்குள் கொண்டு வர தன்னால் காத்திருக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார். அதே சமயத்தில் தற்பொழுது தேர்வு செய்ய முடியாத சூழல் பற்றியும் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஷாமர் ஜோசப் நிச்சயமாக அனைத்து வடிவிலான கிரிக்கெட் வீரராக இருப்பார். வெள்ளைப்பந்து அணியில் அவரை சேர்ப்பதற்கு என்னால் காத்திருக்க முடியாது. ஆனால் பாருங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு நடைமுறை இருக்கிறது. நானும் தேர்வாளர்களும் அதன் அடிப்படையில்தான் செயல்படுகிறோம். டி20 உலகக்கோப்பை வரவிருக்கும் நிலையில் அவர் எனக்கு புதிய தலைவலியை உண்டாக்கி இருக்கிறார்.

இந்தச் சமயத்தில் காயத்தில் இருந்து திரும்ப வந்து இருக்கும் ஜெய்ஸ்டன் சீல்ஸ் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். எனவே அனைத்து கிரிக்கெட் வடிவங்களுக்கும் சிறப்பான அணைகளை தயார் செய்து வருகிறோம். ஒரு கிரிக்கெட் தேசமாக விரும்புவது இதுவாகத்தான் இருக்க முடியும்.

அவருக்கு கால் விரலில் காயம் பட்டிருந்தது. அவர் தற்பொழுது வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கட்டும். அவர் வீட்டை விட்டு வெளியில் இவ்வளவு நாட்கள் இருப்பது இதுவே முதல் முறை. அவருக்கு இளம் குடும்பம் இருக்கிறது.

நாங்கள் எல்லாவற்றையும் திட்டமிட்டு மிகச் சரியாக செய்து வருகிறோம். அவருடைய குடும்பத்துடன் இந்த நேரத்தை அவர் செலவிட வேண்டியது முக்கியம் என நினைக்கிறேன். ஏனென்றால் இது போன்ற பெரிய வெற்றிகள் அடிக்கடி கிடைக்காது. இதை அவர் தனது குடும்பத்துடன் அனுபவிக்க வேண்டும்.

இதையும் படிங்க : “கில்லை விட சர்பராஸ் கானுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்னு நம்பறிங்களா?.. சான்சே கிடையாது” – இந்திய முன்னாள் வீரர் அதிரடி பேச்சு

இப்படி யாராவது சிறப்பாக செயல்படும்பொழுது அதன் மூலமாக உத்வேகம் பெற்று அணி எழ ஆரம்பிக்கிறது. இது வீரர்களின் முகத்தில் புன்னகையை உருவாக்குகிறது. சவால்கள் வரும்பொழுதெல்லாம் நீங்கள் அதை வென்றால் நினைவில் கொள்ளப்படுவீர்கள்” என்று கூறியிருக்கிறார்.