சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிகக் கோலாகலமாக கலை நிகழ்ச்சிகளுடன் நாளை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 17 வது ஐபிஎல் சீசன் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துவங்க இருக்கிறது.
நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ், இந்திய ரன் மெஷின் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்து ரசிகர்கள் நாளை எப்பொழுது விடுவதற்காக மிகவும் உற்சாகமாக காத்திருக்கிறார்கள்.
நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் தங்கள் அணிகளுக்கு தேவையான வீரர்களை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க தயாராக இருந்த அணிகள், பெரிய விலை கொடுத்து முடிந்த வரையில் தேவைப்பட்ட வீரர்களை வாங்கி அணிகளை மிக பலமாக மாற்றி இருக்கின்றன. மேலும் இம்பேக்ட் பிளேயர் விதியும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் எந்த ஒரு அணிகள் மோதிக் கொள்ளும் ஆட்டத்திலும் கடுமையான போட்டி இருப்பது உறுதி. இதனால் ரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட் பார்க்க கிடைக்கும்.
மேலும் சில அணிகளில் பேட்டிங் வரிசை மாற்றங்கள் மற்றும் பந்துவீச்சு வியூகங்கள், இம்பேக்ட் பிளேயர் திட்டம் என எப்படி களம் இறங்க போகிறார்கள் என்பது குறித்து நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. லக்னோ மணிக்கு ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர், ஆர்சிபி அணிக்கு ஜிம்பாப்வேவின் ஆன்டி ஃபிளவர் ஆகிய வெற்றிகரமான பயிற்சியாளர்கள் வந்திருக்கிறார்கள். எனவே இவர்கள் எவ்வாறான திட்டங்களை களத்திற்கு கொண்டு வருகிறார்கள்? என்பதும் சுவாரசியமான விஷயம்.
ஆர்சிபி-யின் துரதிஷ்டம் மாறுமா?
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 16 ஆண்டுகளில் தலா ஐந்து முறை என சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பத்து முறை ஐபிஎல் கோப்பையை தன் வசம் வைத்திருக்கின்றன. இப்படிப்பட்ட வெற்றிகரமான அணிகளுக்கு இருக்கும் வியாபாரம் மற்றும் ரசிகர் கூட்டம், ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணிக்கும் இருப்பது பெரிய அதிசயம். எனவே அப்படிப்பட்ட ஒரு அணி கோப்பையை வெல்லுமா? என்பதும், வென்றால் எப்படி இருக்கும்? என்பதும் பல ரசிகர்கள் கற்பனை செய்யும் விஷயமாக அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆர்சிபி அணி புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது. ஜெர்சியில் இருந்த கருப்பு நிறத்தை எடுத்துவிட்டு புதிதாக அதற்கு பதிலாக நீலத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் ஆர்சிபி அணியில் இருந்த பெங்களூர் என்பது பெங்களூரு என்று மாற்றப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: NO.1 டி20 பவுலர்.. ஆனா என்னை நீக்கிட்டாங்க.. ஜெய்ஸ்வால் காட்டுன வழியில் போறேன் – ரவி பிஸ்னோய் பேட்டி
தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிரட் லீ “ஏபி.டிவில்லியர்ஸ் என் அருகில் இருக்கிறார் என்பதற்காக நான் சொல்லவில்லை. நான் ஆர்சிபி அணிக்கு எதிராக செல்ல விரும்பவில்லை. அவர்கள் இந்த முறை நல்ல அணியை கொண்டிருக்கிறார்கள். அவர்களால் கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் நிறைய மூட நம்பிக்கைகள் இருக்கின்ற காரணத்தினால், அவர்கள் ஜெர்சியையும் அணியின் பெயரையும் மாற்றி இருக்கிறார்கள். இது அவர்களுடைய ஆண்டாக இருக்கலாம் என கூறி இருக்கிறார்.