2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இந்தியா ? 145 ரண்களை இலக்காக நிர்ணயித்தது பங்களாதேஷ் !

0
121
virat kholi indian team

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான  இரண்டாம் டெஸ்ட் போட்டியின்  மூன்றாம் நாளான இன்று  பங்களாதேஷ் அணி 145 ரன்கள்  வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக இன்று 7 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இன்றைய நாள் ஆட்டத்தை துவங்கிய பங்களாதேஷ் அணி  அடுத்தடுத்து விக்கெட்டுகளை  இழந்தது.

இளம் வீரர் ஜாகீர் ஹசன் ஒரு முனையில் நின்று ஆடினாலும் அனுபவ வீரர்களான  ஷகீப் அல் ஹசன் மற்றும் முஸ்பிகுர் ரஹீம் போன்றோர்  குறைவான ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து  ஜாகிர் ஹசனுடன் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் சிறப்பாக ஆடினார் .

- Advertisement -

தனது முதல் டெஸ்ட் அரை சதத்தை  பதிவு செய்த  ஜாஹிர் ஹசன் ஜெய்தேவ் உனக்கட் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து  நூருல் ஹசன் சற்று அதிரடியாக ஆடி ரன்கள் உயர உதவினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய லிட்டன் தாஸ் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அதன் பிறகு அதிரடியாக ஆடிய அவர்  சிராஜ் பந்துவீச்சில்  கிளீன் போல்ட் ஆனார் . இவர் சிறப்பாக ஆடி 73 ரண்களை எடுத்திருந்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும் .

  பந்துவீச்சாளர் டஸ்கின் அகமது மட்டும் 31 ரன்களுடன்  இறுதிவரை ஆட்டமல்லாமல் இருந்தார். பங்களாதேஷ் அணி  231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் அக்சர் பட்டேல்  சிறப்பாக பந்து வீசி  3  விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சிராஜ், உமேஷ்  யாதவ் மற்றும் அஸ்வின் தலா 2  விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து  நூற்றி நாற்பத்தி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  ஆடிக் கொண்டிருக்கும் இந்திய அணி  12  ரன்களுக்கு  2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அணியின் கேப்டன் கே எல் ராகுல் ஒரு ரன்களில்  ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து புஜாரா 6 ரண்களில் ஆட்டம் இழந்தார் . தற்போது கில் மற்றும் அக்ஷர் பட்டேல்   இருவரும் ஆடி வருகின்றனர் .

- Advertisement -

145 ரன்கள் என்பது குறைவான இலக்கு தான் என்றாலும்  ஆடுகளம் பந்து வீச்சுக்கு  சாதகமாக இருப்பதால் இந்தியா அணி இந்த இலக்கை எட்ட  போராட வேண்டி இருக்கும் . இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின்  இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா அணி பலப்படுத்திக் கொள்ளலாம்