“வருண் மற்றும் நரேன் சுழலில் சிக்கிய சிஎஸ்கே” …. “சேப்பாக்கத்தில் கொல்கத்தாவின் சவாலை சமாளிக்குமா”?….145 ரன்கள் வெற்றி இலக்கு!

0
112

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 61 வது போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன . இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டிங் தேர்வு செய்தார் .

சென்னை அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ருத்ராஜ் மற்றும் கான்வே இருவரும் அதிரடியாக ஆடினர் . அணியின் ஸ்கோர் 31 ஆக இருந்தபோது வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார் ருத்ராஜ் . இதனைத் தொடர்ந்து டெவான் காண்வே உடன் ஜோடி சேர்ந்தார் அஜிங்கியா ரகானே.

- Advertisement -

இருவரும் இணைந்து சென்னை அணியின் ஸ்கோர் உயர சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . புதிய பங்கிற்கு பிறகு ஆடுகளம் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைத்ததால் பேட்ஸ்மேன்களால் விரைவாக ரன் குவிக்க முடியவில்லை . இதனை சரியாகப் பயன்படுத்திய கொல்கத்தா அணியின் சுழற் பந்து வீச்சு ஜோடியான வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் இருவரும் சிறப்பாக பந்துவீச்சு சென்னை அணியை தடுமாற்றத்திற்கு உள்ளாக்கினர் .

அஜிங்கிய ரகானே.கான்வே. அம்பட்டி ராயுடு மற்றும் மொயின் அலி ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டம் இழந்ததால் சென்னை அணி பெரும் தடுமாற்றத்திற்கு உள்ளானது . எட்டாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த சென்னை 11 ஓவர் முடிவதற்குள் 5 விக்கெட் களை இழந்து தடுமாறியது .

கான்வே 30 ரன்கள்ிலும் ரகானே பதினாறு ரண்களிலும் ராயுடு 4 மற்றும் மொயின் அலி 1 என தொடர்ந்து ஆட்டம் இழந்ததால் சென்னை அணி 11ஓவர்களில் 72 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மக்களில் இருந்தது .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே இருவரும் இணைந்து சிஎஸ்கே அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிய இவர்கள் இருவரும் ஆறாவது விக்கெட் இருக்கு ஜோடியாக 68 ரண்களை சேர்த்தனர் . 24 பந்துகளில் 20 ரன்களை எடுத்த ரவீந்திர ஜடேஜா 19ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார் .

இறுதியில் சிவம் தூபே 48 ரன்கள்டனும் எம் எஸ் தோனி இரண்டு ரன்கள்டனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர் . சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருக்கிறது . கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் சுனில் நரேன் 15 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களையும் வருண் சக்கரவர்த்தி 32 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சர்துல் தாக்கூர் மற்றும் அரோரா ஆகியோர் தல ஒரு விக்கெட் வீழ்த்தினர் .