யோசிக்காம நான்காவது டெஸ்டில் சூரியகுமாரை கொண்டு வாங்க! – பாகிஸ்தான் வீரர் வலியுறுத்தல்!

0
168
Sky

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் எதிர்பாராத ஒரு சாலை விபத்தில் சிக்கிய காரணத்தால் இந்திய அணி தற்பொழுது நெருக்கடியைச் சந்தித்து வருகிறது!

நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தாக்கி ஆடி ஆட்டத்தில் தாக்கத்தை உருவாக்கும் அளவுக்கு இந்திய அணியில் நடு வரிசையில் யாரும் கிடையாது. ரிஷப் பண்ட் இடத்தில் தற்பொழுது பரத் விளையாண்டு வருகிறார். இதுவரை ஐந்து இன்னிங்ஸ் விளையாடி உள்ள அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை!

- Advertisement -

ரிஷப் பண்ட் இல்லாத காரணத்தால் அவர் இடத்தை நிரப்ப முதல் டெஸ்ட் போட்டியில் சூரியகுமார் மற்றும் பரத் இருவர் இடம்பெற வேண்டியதாக இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் சூரிய குமாரிடமிருந்து பெரிய ரன்கள் வரவில்லை. அடுத்து இரண்டாவது போட்டியில் ஸ்ரேயாஸ் காயம் குணமடைந்து அணிக்கு திரும்பியதால் சூரியகுமார் தனது இடத்தை இழந்தார்.

இந்த நிலையில் இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைய, அணியில் மீண்டும் மாற்றங்கள் தேவை என்கின்ற பேச்சுகள் என ஆரம்பித்திருக்கிறது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது
” இந்திய பேட்டர்கள் ரோகித், கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஆகியோர் ரன்கள் எடுக்க வேண்டும். சூரியகுமார் யாதவ் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் மிக நன்றாக விளையாடக் கூடியவர். இதனால் அவரை நான்காவது டெஸ்ட் போட்டியில் அணிக்குள் கொண்டு வருவது குறித்து கட்டாயம் பரிசீலிக்க வேண்டும். அவரை அணுக்கள் கொண்டுவர என்ன மாற்றங்கள் செய்வது என சிந்திக்க வேண்டும்!” எனக் கூறியிருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நான்காவது டெஸ்டில் இந்தியா பேட்டிங்கில் கிளிக் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முறையும் ரண்களுக்காக கீழ் வரிசை பேட்ஸ்மேன்களையே சார்ந்து இருக்க முடியாது. விராட் கோலி, ஸ்ரேயாஸ் எப்பொழுது ரன்கள் எடுப்பார்கள்? முதல் நாளிலேயே நீங்கள் இந்தூர் ஆட்டத்தில் தோற்று விட்டீர்கள். டாஸ் வென்று நீங்கள் முதலில் பேட் செய்த போதும் 109 ரன்னிலேயே சுருண்டு விட்டீர்கள்!” என்று கூறியிருக்கிறார!

சுப்மன் கில் பேட்டிங் அணுகுமுறை பற்றி பேசிய அவர் ” மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் தோல்வி அடைந்த பிறகு கில் மீது வாள் தொங்கி கொண்டிருக்கும். அவர் சொதப்பலான ஷாட் விளையாடினார். நிச்சயம் விராட் கோலி அதில் மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டார். இப்படி நடக்கும் பொழுது அணியில் உங்களது இடம் ஸ்கேனரில் வருகிறது. ஆட்டம் இழக்கும் விதத்தில் கேஎல் ராகுல் துரதிஸ்டத்தில் இருந்தார். கில் அதில் மேம்பாடு அடைந்து கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்!