தோனியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறிய பட்லர் – எம் எஸ் தோனியின் 7 வருட சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜோஸ் பட்லர்

0
90

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று முன்னர் நடந்து முடிந்தது. தொடரை இங்கிலாந்து அணியின் 3-0 என்கிற கணக்கில் கைப்பற்றியது.

மூன்று போட்டியில் 2 போட்டியில் மட்டுமே விளையாடிய ஜோஸ் பட்லர் மொத்தமாக 248 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். நடந்து முடிந்த தொடரில் அவர் முதல் போட்டியில் 162 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று மூன்றாவது போட்டியில் அவர் 86 ரன்கள் குவித்தார். குறிப்பாக நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் அவர் 14 பவுண்டரிகள் மற்றும் 19 சிக்சர்கள் அடித்தது குறிப்பிடதக்கது.

- Advertisement -

ஐபிஎல் தொடர் முதலே அவர் தற்பொழுது அபாரமான பார்மில் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று அவர் அதன் பின்னர் தற்போது நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பட்டையை கிளப்பியுள்ளார்.

7 வருட மகேந்திர சிங் தோனியின் சாதனையை உடைத்த ஜோஸ் பட்லர்

- Advertisement -

ஒருநாள் தொடரை பொருத்தவரையில் அதிகபட்ச சிக்சர்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் மகேந்திர சிங் தோனி முதலிடத்தில் இருந்து வந்தார். 2015 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் அவர் 17 சிக்சர்கள் அடித்து இதுநாள் வரையில் முதலிடத்தில் இருந்து வந்தார்.

நெதர்லாந்து அணிக்கு எதிராக தற்பொழுது நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் 19 சிக்சர்கள் அடித்ததன் மூலம் ஜோஸ் பட்லர் மகேந்திர சிங் தோனி பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் ஏழு வருட மகேந்திர சிங் தோனியின் சாதனையை முடிவுக்குக் கொண்டுவந்து முதல் இடத்திற்கு ஜோஸ் பட்லர் முன்னேறி உள்ளது குறிப்பிடதக்கது.

ஒருநாள் தொடரில் அதிக சிக்சர் அடித்த விக்கெட் கீப்பர்கள்

19 – ஜோஸ் பட்லர் vs நெதர்லாந்து 2022*

17 – MS தோனி vs இலங்கை, 2005

16 – ஏபி டி வில்லியர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், 2015

- Advertisement -