“பட்லர் எடை போடப்படுகிறார்.. கேப்டன் பதவி அவருக்கு சரியில்லை!” – நாசர் ஹுசைன் அதிரடியான பேட்டி!

0
187
Buttler

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது.

லீக் சுற்றில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய 6 போட்டிகளை இங்கிலாந்து அணி அதிர்ச்சிகரமாக தோற்று இருக்கிறது. தனது இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வென்றதுடன், இங்கிலாந்து அணியின் வெற்றி கணக்கு அப்படியே நிற்கிறது.

- Advertisement -

மேலும் தற்பொழுது இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபியில் பங்கு பெறுவதற்கான தகுதி கிடைக்குமா? என்கின்ற சந்தேகம் இருக்கிறது. புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணியுடன் சேர்த்து முதல் எட்டு இடங்களில் வருகின்ற அணிகள் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அணியை சரிவிலிருந்து நிமிர்த்தம் விதமாக ஒரு கேப்டனாக முன்னிருந்து செயல்பட வேண்டிய அவசியம் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லருக்கு இருக்கிறது. ஆனால் அவரால் பேட்டிங்கில் அணியை முன்னின்று வழிநடத்தும் அளவுக்கு நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். அவருடைய மோசமான ஃபார்ம் அணியை மிகவும் பாதிப்படைய வைத்திருக்கிறது. இதை அவரை ஏற்றுக் கொள்ளவும் செய்திருக்கிறார்.

இதுவரை விளையாடிய ஏழு லீக் போட்டிகளில் 43, 20, 9, 15, 8, 10, 1 என 113 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய அவர் மீண்டும் மோசமான முறையில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

இவருடைய தலைமையில்தான் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

ஜோஸ் பட்டலர் குறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னால் கேப்டன் நாசர் ஹுசைன் கூறும்பொழுது ” ஒட்டுமொத்த அணியின் செயல் திறனும் மோசமான நிலைமையில் இருக்கும் பொழுது, அங்கு ஒரு கேப்டனின் தனிப்பட்ட திறன் எடை போடப்படுகிறது.

இப்படி ஒருவர் மற்றவர்களால் எடை போடப்படும் நேரத்தில், சிலருக்கு அது ஊக்கச் சக்தியாக மாறுகிறது. ஆனால் இங்கிலாந்து அணி மிக மோசமாக விளையாடி வருவது, இங்கிலாந்து கேப்டன் பட்லரின் பேட்டி மோசமாக பாதித்துவிட்டது!” என்று கேப்டன் பதவியை விடுவது நல்லது என்கின்ற முறையில் கூறியிருக்கிறார்!