நேற்று கேப்டனாக பட்லர் செய்த பெரிய தவறு.. யாரும் கண்டுகொள்ளாமல் விட்ட அதிசயம்.. எல்லாமே சொதப்பல்!

0
2015
Buttler

நேற்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்ற லக்னோ ஆடுகளம் வந்து வீட்டுக்கு சாதகமாக இருந்தது. ஆடுகளத்தில் பந்தின் வேகம் நிலையாக இல்லாமல் இரு வேறு விதமாக இருந்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் டைம் செய்வதற்கு கடினமாக இருந்தது.

இந்தக் காரணத்தினால் இந்திய அணி பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டது. மேலும் விராட் கோலி பேட்டிங் செய்ய வந்த பொழுது ரோகித் சர்மா ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விளக்கியிருந்தார். ஆனாலும் ரன் வராத காரணத்தினால் விராட்கோலி மேலே வந்து விளையாட முயல, தாமதமாகவும் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் உடனும் வந்த பந்து அவரது விக்கெட்டை வாங்கி விட்டது.

- Advertisement -

இப்படியான நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கேஎல் ராகுலுடன் இணைந்து 30 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்று இருந்த அணியை, மெல்ல மெல்ல ஓரளவுக்கு கரை சேர்க்க ஆரம்பித்தார். ஆட்டத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து அமைத்த பார்ட்னர்ஷிப்தான் ஒட்டுமொத்தமாக மிக அதிகமான பார்ட்னர்ஷிப்.

இந்திய அணி அந்த இடத்தில் ஒரு விக்கெட் இழந்து இருந்தால், நேற்று இங்கிலாந்து அணிக்கு என்ன நிலைமை ஏற்பட்டதோ அதே நிலைமைதான் இந்திய அணிக்கும் ஏற்பட்டிருக்கும். இங்கிலாந்து போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகமாக மாறி இருக்கும்.

அப்படியான நேரத்தில் தனது அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஆதில் ரசித்தை தொடர்ச்சியாக பந்து வீச அனுமதிக்காமல் ஜோஸ் பட்லர் நிறுத்திவிட்டார். அதே ஆதில் ரசித் இரண்டாவது முறையாக பந்து வீச வந்த பொழுது ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா என இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

ஆதில் ரசித் முதன்மை சுழற் பந்துவீச்சாளர் என்கின்ற காரணத்தினாலும், ஆடுகளம் மற்றும் ஆட்டத்தின் சூழ்நிலை காரணமாக, அவரை தேவைப்பட்டு இருந்தால் தொடர்ச்சியாக 10 ஓவர்களும் வீச வைத்திருக்கலாம். அப்படியான அதிரடி தாக்குதலை ஜோஸ் பட்லர் நேற்று செய்திருந்தால் நிச்சயம் முடிவில் மாற்றம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தது.

உதாரணமாக நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் வோக்ஸ் எடுத்ததும் ஏழு ஓவர்கள் வீசி இருந்தார். ஏழு பேட்ஸ்மேன்கள் உடன் இந்திய அணி விளையாடிய பொழுது, மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு, ஆதில் ரசித்தை நிறுத்தி, லிவிங்ஸ்டனை பட்லர் கொண்டு வந்தது மிகவும் தவறான ஒரு முடிவு.

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணி பயங்கரமாக சொதப்பி இருந்த காரணத்தினால், கேப்டனாக பட்லர் செய்த தவறை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் குறிப்பிட்ட இந்த போட்டியில் முதலில் தவறு நடந்த இடம் கேப்டன்சியில்தான். எனவே அந்த முதல் தவறு நடக்காமல் இருந்தால் போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இங்கிலாந்து அணியின் வீரர்கள் மட்டுமல்லாமல் கேப்டனும் இந்திய சூழ்நிலையை கணிக்க முடியாதவர் ஆகவே இருக்கிறார்!