திடீரென இந்தியா திரும்பிய பும்ரா.. காரணம் என்ன?.. தொடர்ந்து விளையாடுவாரா?.. ஆசிய கோப்பையில் திருப்பம்!

0
10196
Bumrah

கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கான தயாரிப்புகளை இந்திய அணி நிர்வாகம் ஆரம்பித்த போது இருந்து பெரிய பிரச்சனைகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது!

கடைசி டி20 உலகக்கோப்பைக்கு ஒரு கச்சிதமான அணியை உருவாக்கி வைத்திருந்த வேளையில், பௌலிங் யூனிட்டில் மிகப்பெரிய ஆயுதமாக இருந்த ஜஸ்ட்பிரித் பும்ரா காயத்தால் வழங்கினார். அடுத்து மிக முக்கியமாக இடது கை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் விலகினார்.

- Advertisement -

உலகக் கோப்பைக்கான அணி தயாரிப்பில் இப்படி இரண்டு முக்கியமான வீரர்கள் திடீரென்று காயம் அடைந்த விலக, அது இந்திய அணி நிர்வாகத்தை மிகப்பெரிய அளவில் பாதித்தது. உடனடியாக அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த இரண்டு வீரர்கள் போட்டியில் தரக்கூடிய தாக்கத்தை புதியவர்களால் ஏற்படுத்த முடியவில்லை.

இதேபோல் அடுத்து இந்த வருடம் இந்தியாவில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தயாரிப்பில் ஈடுபட்ட இந்திய அணி நிர்வாகத்திற்கு, ஜஸ்ட்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பிரசித் கிருஷ்ணா என முக்கிய வீரர்கள் காயம் அடைந்தது பெரிய பிரச்சினையை கொடுத்தது.

தற்பொழுது இந்த காயம் அடைந்த குழுவில் ரிஷப் பண்ட் தவிர மற்ற அனைவரும் உடல் தகுதி பெற்று ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்திய அணி நிர்வாகம் சொந்த நாட்டில் சந்திக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இப்பொழுதுதான் கொஞ்சம் தைரியமாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஒரு முழு அணியாக தற்பொழுது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி களம் கண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாக நாளை நேபாள் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் காயத்திலிருந்து திரும்ப வந்த பும்ரா விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜஸ்ட்ப்ரீத் பும்ரா இன்று தனிப்பட்ட காரணத்திற்காக இலங்கையில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு சென்றுள்ளார் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது. மேலும் இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகவே இருக்கிறது.

இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை சென்றுள்ள ஜஸ்ட்ப்ரித் பும்ரா முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், அவர் ஆசிய கோப்பையின் இரண்டாவது சுற்றில் நிச்சயம் கலந்து கொண்டு விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் ஏதும் இல்லை என்பது தெரிய வருகிறது. இப்பொழுது சற்று இதுதான் இந்திய அணி நிர்வாகத்திற்கு நிம்மதியான விஷயமாக இருக்கும்!