இந்திய கிரிக்கெட்

ஸ்டெயினுக்கு அடுத்து பும்ரா செய்த மாஸ் சம்பவம்.. ஸ்மித்துக்கு நடந்த சோகம்.. திருப்பி கொடுக்கும் இந்திய அணி

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டியில் ஏமாற்றிய இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அசத்தி வருகிறது. பும்ரா ஸ்மித்தை கோல்டன் டக் அடிக்க வைத்து அசத்தினார்.

- Advertisement -

இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் பும்ரா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என முடிவு செய்தார்.

சரிந்த இந்திய அணி

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 49.4 ஓவரில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக அறிமுகவீரர் நிதிஷ்குமார் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37, கேஎல்.ராகுல் 26 ரன்கள் எடுத்தார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி வெறும் ஐந்து ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இந்திய அணியில் ஆட்டம் இழந்த 10 பேரில் ஒன்பது பேர் கீப்பர் பக்கமாக கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்கள். இது இந்திய அணியின் பவுன்ஸ்க்கு எதிரான பேட்டிங் டெக்னிக் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஹேசில்வுட் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

அசத்திய இந்திய கேப்டன்

இதைத் தொடர்ந்து விளையாட வந்த ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மெக்ஸ்வீனி 10, கவாஜா 8 இருவரையும் உம்ரா வெளியே அனுப்பி வைத்தார். கவாஜா வெளியேறியதும் அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் ஸ்மித் விளையாடுவதற்கு வந்தார்.

இந்த நிலையில் ஸ்மித்துக்கு பும்ரா பந்தை நன்றாக புல் லென்த்தில் உள்நோக்கி வீசினார். வழக்கம்போல் ஸ்மித் ஆப் ஸ்டெம்பில் விளையாட வந்தார். ஆனால் உள்நோக்கி சீம் ஆக பேடில் பட்டது. இதைத்தொடர்ந்து பும்ரா அவுட் அப்பீல் செய்ய நடுவர் அவுட் கொடுத்தார். ஸ்மித் பரிதாபமாக கோல்டன் டக் ஆனார்.

இதையும் படிங்க : 150 ரன்.. 9 பேர் ஒரே மாதிரி சம்பவம்.. வெளியான வீக்னஸ்.. இந்திய அணி மோசமான பேட்டிங்.. ஆஸி அசத்தல் பந்துவீச்சு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் இதுவரை இரண்டு முறை மட்டுமே கோல்டன் டக் ஆகியிருந்தார். முதல் முறை ஸ்மித்தை 2014 ஆம் ஆண்டு டேல் ஸ்டெய்ன் கோல்டன் டக் செய்து இருந்தார். இதற்கு அடுத்து இரண்டாவது முறையாக மெத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா கோல்டன் டக் செய்து அனுப்பி வைத்து இந்திய அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts