இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெர்த்தில் தொடங்கிய முதல் போட்டியில் இந்திய அணி ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. பெர்த் மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் அனுபவமற்ற இந்திய பேட்டிங் யூனிட் முதலில் பேட்டிங் செய்யலாமா வேண்டாமா? என்கிற குழப்பம் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
பரிதாபமான சரிந்த இந்திய அணி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் இருவரும் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து வெளியேறி பெரிய ஏமாற்றம் தந்தார்கள். விராட் கோலி 5 ரன்னில் வெளியேற, சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 26 ரன்னில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து வந்த துருவ் ஜுரல் 11, வாஷிங்டன் சுந்தர் 4, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அடுத்து வந்த ஹர்ஷித் ராணா 7, கேப்டன் பும்ரா 8 ரன்னில் வெளியேறினார்கள். ஒரு முனையில் தாக்குப்பிடித்து விளையாடிய அறிமுக வீரர் நிதிஷ் குமார் ரெட்டி 41 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வெளியேறினார். இறுதியாக இந்திய அணி 49.4 ஓவரில் 150 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பரிதாபமான பேட்டிங் டெக்னிக்
இன்று இந்தியா இழந்த 10 விக்கெட்களில் நிதீஷ் குமார் ரெட்டி மட்டுமே விக்கெட் கீப்பருக்கு முன்பாக கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் 9 பேரும் ஸ்லிப் மற்றும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்கள். அவர்களுடைய பேட்டிங் டெக்னிக் மிகவும் பரிதாபமாக இருந்த காரணத்தினாலே அனைவரும் பின்புறமாக கேட்ச் கொடுத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 147 வருடம்.. வெறும் 13 இன்னிங்ஸ்.. ஆஸி மண்ணில் ரிஷப் பண்ட் புது சரித்திரம்.. மாஸ் ரெக்கார்டு
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஜோஸ் ஹேசில்வுட் 4, மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், மிட்சல் மார்ஸ் என மூன்று பேரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.






