பக்கா பிளான் போடும் பிசிசிஐ.. மீண்டும் அணிக்கு திரும்பும் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயருக்கு புதிய ட்விஸ்ட் காத்திருக்கு!

0
1859

உடல்நிலை கிட்டத்தட்ட முழுமையாக குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார்கள் பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர். எப்போது திரும்புகிறார்கள்? அவர்கள் இந்திய அணிக்கு திரும்பும் முன் புதிய ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளது பிசிசிஐ. அது என்ன? என்கிற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னணி வீரர்களாக இருந்து வரும் பும்ரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் காயம் காரணம் இந்திய அணிகளிடமும் விலகி சில மாதங்களாக சிகிச்சையில் இருக்கின்றனர்.

- Advertisement -

ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா அணியுடன் டி20 தொடருக்கு முன்பு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு டி20 உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் தொடர் என எதிலும் விளையாடவில்லை. ஐபிஎல் தொடரிலும் விளையாடவில்லை.

ஐபிஎல் தொடருக்கு முன்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட பும்ரா கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்கிற தகவல்கள் கூறப்பட்டது. பின்னர் முதுகு பகுதியில் காயம் என்பதால் எப்போது திரும்புவார் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும் கூறப்பட்டது.

கடந்த மூன்று வாரங்களாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ரா சற்று குணமடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் பயிற்சி ஆட்டத்திலும் விளையாட வைக்கப்பட உள்ளார். இதில் முழு உடல் தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் விரைவாக இந்திய அணிக்கு திரும்புவார். இல்லையெனில் உலககோப்பையின் திட்டத்தில் இருந்து நீக்கப்படுவார் என்கிற தகவல்கள் வந்திருக்கிறது.

- Advertisement -

தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அதை முடித்து வந்த பிறகு, அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. முழு உடல்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் பும்ரா அயர்லாந்து தொடரில் விளையாட வைக்கப்பட உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர் என மொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி அறுவைசிகிச்சை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்த ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வரும் அவர் பயிற்சிகளிலும் ஈடுபட்டு இருக்கிறார்.. இவர் தற்போது குணமடைந்து பயிற்சி ஆட்டத்திலும் விளையாட உள்ளார். அதில் பும்ரா உடன் சேர்ந்து தனது உடல்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட வைக்கப்பட உள்ளார் என்று பிசிசிஐ தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

50 ஓவர் உலகக்கோப்பைக்கு இன்னும் 80 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இருவரும் இந்திய தேர்வுக்குழுவின் ரேடாரில் இருக்கின்றனர். இவர்களை விளையாட வைக்க பிசிசிஐ தரப்பு கடுமையாக போராடி வருகிறது. அதற்கு பயிற்சி முன்னோட்டமாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு ஆவலோடு இருக்கிறது. ஆனால் பயிற்சி ஆட்டத்தில் இவர்கள் உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே இவை சாத்தியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து தொடரில் தொடரில் விளையாட வைக்கப்பட்டு நன்றாக செயல்படும் பட்சத்தில் 50-ஓவர் உலகக்கோப்பைக்கு இருவருமே எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இல்லையெனில் வெளியே அனுப்பப்படும் நிலை ஏற்படும்.