பும்ரா ஷமி சிராஜ் எங்களுக்கு ஒரு மேட்டர் கிடையாது.. காரணம் இவ்வளவுதான் – பத்திரிக்கையாளர் கேள்விக்கு பாகிஸ்தான் பேட்டர் பதில்!

0
2241
Bumrah

இந்தியா பாகிஸ்தான் அணிகள் இந்த ஆண்டு எல்லாம் சரியாக அமைந்தால் ஐந்து போட்டிகளில் மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இது இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி பொதுவான கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது!

இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆசியக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த முறை ஆசியக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தான் நாட்டிற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து இழுபறி நீடித்து வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ஒரு வழியாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரண்டு நாடுகளிலும் ஆசியக் கோப்பையை நடத்துவதற்கு இரு நாடுகளையும் சமாதானப் படுத்தி ஒப்புக்கொள்ள செய்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆசியக் கோப்பை தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இலங்கை பல்லகலே மைதானத்தில் நடக்கிறது.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரண்டு அணிகளும் ஒரே பிரிவில் இருப்பதால் முதல் சுற்றில் ஒரு போட்டியில் மோதிக் கொள்ளும். நேபாள அணியை வென்று இரு அணிகளும் எப்படியும் இரண்டாவது சுற்றுக்கு சென்றுவிடும் என்பதால், இரண்டாவது முறையாக மோதும். இரண்டு அணிகளுமே சிறப்பாக செயல்பட்டால் இறுதிப் போட்டியிலும் மோதிக் கொள்ள முடியும். எனவே நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இரண்டு அணிகளும் மூன்று முறை மோதிக் கொள்வதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.

- Advertisement -

தற்பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்நாட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான 18 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது. மேலும் அதில் இடம்பெற்றுள்ள வீரர்களில் இருந்தே ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியும் அமையும். பாகிஸ்தான அணியைப் பொறுத்தவரை ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைக்கு அணியாக இறுதி செய்யப்பட்டு தயாராக இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிப்பது குறித்து பாகிஸ்தான் இளம் பேட்ஸ்மேன் அப்துல்லா ஷபியுக் இடம் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ” வலைப்பயிற்சியின் போது ஷாஹின், ஹாரிஸ், நசீம் ஆகியோரை நீங்கள் எப்போதும் எதிர்கொண்டு தயாராகி வருகிறிர்கள். இதனால் உங்களுக்கு எதிரணி வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள எளிமையாக இருக்கிறதா? குறிப்பாக இந்தியாவைப் பற்றி பேசினால் ஜஸ்ப்ரீத் பும்ரா திரும்ப வருவதாக தெரிகிறது. இது பற்றி நீங்கள் என்ன சொல்கிறிர்கள்?” என்ற கேள்வியை முன் வைத்தார்.

இதற்கு பதில் அளித்த பாகிஸ்தான் இளம் பேட்ஸ்மேன் ” எங்கள் பந்து வீச்சு தாக்குதல் மிகவும் நன்றாக உள்ளது. உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சு தாக்குதல் அணியான ஷாஹின், ஹாரிஸ், நசீம் ஆகியோரை நாங்கள் எதிர்கொண்டு பயிற்சி பெறுகிறோம். அவர்களின் சவாலான பந்துவீச்சை எதிர்கொள்கிறோம். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. நாங்கள் அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி பயிற்சி பெற்று வருவதால், எதிரணி பந்துவீச்சாளர்கள் குறித்து எந்த கவலையும் இல்லை. நாங்கள் அவர்களை சந்தித்து விளையாடுவதற்கான நம்பிக்கையை பெற்றிருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்!