சற்றுமுன்: 2வது டி20ல் உமேஷ் யாதவ் இருக்கமாட்டார்; மாற்று வீரர் அறிவிப்பு!

0
9367

முதல் போட்டியில் பந்துவீச்சால் இந்திய அணி தோல்வியை தழுவியதை கருத்தில் கொண்டு இரண்டாவது போட்டியில் மிகப்பெரிய மாற்றத்தை இந்திய அணி செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி உலககோப்பைக்கு முன்னோட்டமாக டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டி20 போட்டி மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. அதிக ஸ்கோர் அடிக்கக்கூடிய மைதானமாக இது திகழ்ந்து வருகிறது. ஆகையால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் மைல்கல்லை கடந்து, 208 ரன்கள் அடித்தது.

- Advertisement -

பொதுவாக 200 ரன்களுக்கும் மேல் அடித்திருந்தால் கூடுதல் பலமாக பார்க்கப்படும். அதனால் பந்துவீச்சாளர்களும் நம்பிக்கையுடன் ரன்களை கட்டுப்படுத்துவர். ஆனால் இந்திய அணிக்கு முதல் டி20 போட்டி தலைகீழாக மாறியது. துவக்கம் முதலே ஆஸ்திரேலியா அணியின் தாக்குதலை இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தவில்லை. தொடர்ந்து பௌண்டரி மற்றும் சிக்ஸர்களாக விட்டுக் கொடுத்து வந்தனர். குறிப்பாக 13 வது ஓவர்களுக்கு மேல் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.

இறுதியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்விக்கு முழு முக்கிய காரணமாக பந்துவீச்சாளர்களை பலரும் குறிப்பிட்டு விமர்சனம் செய்து வந்தனர். அணியில் பும்ரா போன்ற அனுபவம் மிக்க வீரர் இருக்கும்பொழுது ஏன் அவரை வெளியில் அமர்த்தி விட்டு மற்ற வீரருக்கு சென்றீர்கள் என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. இதற்காக ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களது பதிலை கொடுத்தனர். ஆனாலும் போட்டியை இழந்ததால் இந்திய ரசிகர்கள் கடும் கோபத்தில் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில் இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இரண்டாவது டி20 போட்டியில் உமேஷ் யாதவ் வெளியில் அமர்த்தப்பட்டு, ஜஸ்பிரித் பும்ரா உள்ளே எடுத்து வரப்பட இருக்கிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் அணி நிர்வாகம் அவரை தயார் செய்து வருகிறது. அதை வைத்து நிச்சயம் இரண்டாவது போட்டியில் பும்ரா இறக்கப்பட உள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

- Advertisement -

புவனேஸ்வர் குமார் டெத் ஓவர்களில் மிகவும் சொதப்பலாக இருக்கிறார். ஆகையால் பவர் பிளே ஓவர்களில் பெரும்பாலானவற்றை புவனேஸ்வர் குமாருக்கு கொடுத்துவிட்டு டெத் ஓவர்களில் பும்ரா எடுத்து வந்தால் மிகச் சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்தலாம் என்ற மற்றொரு கோணத்திலும் இந்திய அணி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றனர்.