அணியை விட்டு கிளம்பிய பும்ரா.. மாற்று வீரராக முகேஷ் குமார் அறிவிப்பு.. என்ன காரணம்? பிசிசிஐ கொடுத்த விளக்கம்!

0
23873
Bumrah

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்தியாவில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது!

இந்த தொடரில் பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மத்திய பிரதேசம் இந்தூர் கோல்கர் மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி தொடரை வெல்லும்.

இந்த போட்டிக்கு ஆஸ்திரேலியா தரப்பில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. மிகக்குறிப்பாக கேப்டன் பேட் கம்மின்ஸ் ஓய்வு எடுத்துக் கொண்டு வெளியே இருக்க, ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மற்றும் செய்யப்பட்டு இருந்தது. நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம் பெற்று இருந்தார்.

- Advertisement -

ஆரம்பத்தில் பும்ராவுக்கு தற்போது கொடுக்கப்பட்டிருப்பது ஓய்வு என்று எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் இந்த நிலையில் அவருக்கு பதிலாக மாற்றுவீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.

உலகக்கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பும்ரா காயமடைந்து இருப்பாரோ என்று ரசிகர்கள் தற்பொழுது மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். மாற்று வீரர் அறிவித்த காரணத்தினால் இந்த அச்சம் உருவாகி இருக்கிறது.

இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறும் பொழுது, பும்ரா தனிப்பட்ட தன் குடும்ப விவகாரங்களுக்காக, அணியை விட்டு வெளியே செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இடத்திற்கு வலது கை தேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.