மலிங்கா சாதனையை அவர் கண் முன்னாலே உடைத்த பும்ரா.. தப்பித்த ஹர்திக் பாண்டியா

0
240
Bumrah

இன்று ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்த குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருந்தார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவர் பிளேவில் முதல் மற்றும் மூன்றாவது ஓவரை வீசிய ஆச்சரியப்படுத்தினார். ஏனென்றால் வெளியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா உட்பட மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார்கள்.

- Advertisement -

முதல் மூன்று ஓவர்களுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி நல்ல ரன்கள் எடுக்க, நான்காவது ஓவரை வீசுவதற்கு பூம் ரா உள்ளே வந்து விருதிமான் சகா 19(15) விக்கெட்டை கைப்பற்றி முதல் திருப்புமுனையை தந்தார். இதற்கு அடுத்து சுப்மன் கில் 31(22) ரன்னில் பியூஸ் சாவ்லா பந்தில் வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து அகமதுல்லா ஓமர்சாய் 17 (11), டேவிட் மில்லர் 12 (11), ராகுல் திவாட்டியா கடைசிக் கட்டத்தில் அதிரடியாக 22(15), நிலைத்து இன்று விளையாடிய சாய் சுதர்சன் 45(39) வெளியேறினார்கள். ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற விஜய் சங்கர் 6(5), ரஷித் கான் 4(3) ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் முதல் மூன்று ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா முடிவால் குஜராத் டைட்டன்ஸ் அணி ரன்கள் எடுக்க, நான்காவது ஓவர் வீசிய பும்ரா முதல் விக்கெட்டை எடுத்து தந்தார். இதற்கு அடுத்து வந்து வீச்சிக்கு திரும்ப வந்து அதிரடியாக விளையாட காத்திருந்த டேவிட் மில்லர் மற்றும் செட்டாகி இருந்த சாய் சுதர்சன் இருவரையும் வெளியேற்றினார். இந்த போட்டியில் மொத்தம் நான்கு ஓவர்கள் பந்து வீசி, அதில் 14 டாட் பந்துகள் வீசி, மேலும் 14 ரன்கள் மட்டுமே தந்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியவர் என்கின்ற சாதனையை பும்ரா படைத்தார். இதற்கு முன்பு சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த லசீத் மலிங்கா செய்திருந்தார்.

இதையும் படிங்க : ஆட்டநாயகன் விருதை அவருக்கு தாங்க.. அஸ்வின்ணா சொல்றது அவர்கிட்டதான் இருக்கு – சஞ்சு சாம்சன் பேட்டி

ஐபிஎல் தொடரில் அதிக முறை மூன்று விக்கெட் எடுத்த பந்து பந்துவீச்சாளர்கள்:

20- ஜஸ்பிரித் பும்ரா
19- லசித் மலிங்கா
19 – யுஸ்வேந்திர சாஹல்
17- அமித் மிஸ்ரா
16- டுவைன் பிராவோ
16- உமேஷ் யாதவ்
16- ரஷித் கான்