இந்திய கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட்டில் இன்னொரு சோக ஓய்வா?.. பும்ரா பேசிய பேச்சால் கலங்கிப்போன இந்திய ரசிகர்கள்

ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் உடனான பாட்காஸ்டில் இந்திய நட்சத்திர வீரர் பும்ரா தன்னுடைய ஓய்வு குறித்து பேசி இருக்கும் முறை இந்திய ரசிகர்களை கவலை அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

தற்போது திடீரென இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருந்தார்கள். இந்த நிலையில் பும்ரா தன்னுடைய ஓய்வு குறித்து பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்

சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா வித்தியாசமான பந்துவீச்சு முறையை கொண்டிருக்கிறார். இதன் காரணமாக அவர் காயமடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே காயம் அவரை துரத்துவதால் முதுகில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இன்னொரு முறை அதே பகுதியில் அறுவை சிகிச்சை செய்தால் அவரால் பந்து வீச முடியாது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பும்ரா பேசும் பொழுது “கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. இந்த முறை நான் ஆஸ்திரேலியா சென்றேன். அப்பொழுது நிறைய இளைஞர்கள் வந்து நான் பந்து வீசும் முறையை நகலெடுக்க முயற்சி செய்தார்கள். என்னுடைய இந்த பயணம் எப்போதும் தொடரப்போவதில்லை. இது ஒரு கட்டத்தில் நிற்கத்தான் போகிறது. நான் இந்த விளையாட்டிற்கு ஏதாவது திருப்பி தர விரும்புகிறேன். ஏனென்றால் நான் இப்போது இருப்பதும், நான் கற்றுக் கொண்டது எல்லாமே இந்த விளையாட்டின் மூலமாகத்தான். நான் கடந்து வந்த பயணத்திற்கு நன்றி!”

- Advertisement -

என் ஓய்வு எப்பொழுது?

“எந்த ஒரு தனிநபரும் இவ்வளவு காலம் எல்லாவற்றையும் தொடர்ந்து விளையாடுவது மிகவும் கடினமானது. ஆனால் நான் இதைச் சிறிது காலமாக செய்து வருகிறேன். இறுதியில் உங்கள் உடல் எப்படி செயல்படுகிறது? முக்கியமான போட்டிகள் எதில் விளையாட வேண்டும் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உடலை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்”

இதையும் படிங்க : பிசிசிஐ என்னை விட்றாதிங்க.. அது எனக்கு அவசியம் தேவை.. கேஎல் ராகுல் கோரிக்கை.. இந்திய ரசிகர்கள் பாராட்டு

“நான் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். நான் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது போன்ற எந்த இலக்கையும் நிர்ணயித்துக் கொள்வதில்லை. நான் ஒவ்வொரு நாளாக பார்த்துக் கொள்கிறேன். பயணம் இதுவரையில் நன்றாகவே செல்கிறது. ஆனால் என்னிடம் உந்துதல் போய்விட்டது, முயற்சி என்னிடம் இல்லை, என் உடல் சரியாக செயல்படவில்லை என்பதை நான் உணரும்போது ஓய்வை அறிவித்து விடுவேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts