பிசிசிஐ என்னை விட்றாதிங்க.. அது எனக்கு அவசியம் தேவை.. கேஎல் ராகுல் கோரிக்கை.. இந்திய ரசிகர்கள் பாராட்டு

0
262
Rahul

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல்.ராகுல் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் வைத்திருக்கும் கோரிக்கை ஒன்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்திய அணி அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்து சென்று இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் துவக்கமாக இருப்பதால் முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

கில்லுக்கு அளிக்கப்பட்ட சலுகை

தற்போது இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்திய ஏ அணி தற்போது இங்கிலாந்து சென்று இரண்டு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஜூன் 6-ம் தேதி இரண்டாவது நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி நடக்க இருக்கிறது. இதில் இந்திய ஏ அணியில் கேப்டன் கில், சாய் சுதர்சன் இருவரும் விளையாட வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் கேப்டனாக பணிச்சுமை அதிகம் இருக்கும் என்கின்ற காரணத்தினால் கில் இரண்டாவது நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணிகள் இடம்பெற மாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. சாய் சுதர்சன் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

- Advertisement -

கேஎல்.ராகுல் கோரிக்கை

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் கேஎல்.ராகுல் இந்திய ஏ அணியில் தன்னை சேர்த்துக் கொள்ளும் படியும், ஜூலை ஆறாம் தேதி நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் விளையாட விரும்புவதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்து அதை ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. அவராக முன்வந்து சேர்ந்திருப்பதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. ஆர்சிபி கோப்பையை வெல்ல, எப்படியாச்சும் மும்பையை நிறுத்தியே ஆகனும்.. இல்லனா அவ்வளவு தான்.. அஸ்வின் வார்னிங்

இது சம்பந்தமாக பிசிசிஐ தரப்பில் வெளியான செய்தியில் “கேஎல்.ராகுல் இங்கிலாந்துக்கு திங்கட்கிழமை விமானத்தில் கிளம்புவார். மேலும் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற இந்திய ஏ அணி டெஸ்டில் அவர் விளையாடுவார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரராக அவர் இடம் பெற்று இருப்பதால், இந்த அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் அவருக்கு நல்ல பயிற்சியாக அமையும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -