ரெண்டு பேர் என்ன பண்றாங்கன்னு கண்காணிச்சு கிட்டு இருந்தேன்.. இப்ப புது வேலை கொடுத்திருக்காங்க – பும்ரா பேச்சு

0
56
Bumrah

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 3 ஓவருக்கு 17 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். இதைத்தொடர்ந்து அவர் நேற்றைய போட்டி குறித்து பேசியிருக்கிறார்.

கடந்த சில டி20 போட்டிகளாகவே பும்ரா பவர் பிளேவின் கடைசி ஓவரை வீசுகிறார். பவர் பிளேவுக்கு வெளியில் மூன்று ஓவர்கள் அவருக்கு இருக்கிறது. இதற்கு முன்பாக பவர் பிளேவில் மட்டுமே அவர் மூன்று ஓவர் வீசவும் செய்தார். தொடர்ந்து அவருக்கு வித்தியாசமான வேலைகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

அவர்கள் செய்வதை பார்த்தேன்

இதுகுறித்து பும்ரா பேசும் பொழுது “ஹர்ஷித் மற்றும் ஹர்திக் இருவரும் எப்படி பந்து வீசுகிறார்கள் என்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிலிருந்து நான் எனக்கு தேவையானதை எடுத்தேன். வெள்ளைப்பந்து அதிக நேரம் ஸ்விங் ஆகாது. எனவே இதன் மூலம் நான் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அதற்கு தகுந்த வகையில் நான் முயற்சி செய்தேன்”

” எனக்கு பந்து புதியதாக வேண்டும் பழையதாக வேண்டும் என்று எதுவும் கிடையாது. நான் அணிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் அவ்வளவுதான். என்னை கடைசி ஓவர்களில் மட்டுமே பந்து வீச சொன்னாலும் பிரச்சனை இல்லை. ஆசிய கோப்பையில் நான் வேறு மாதிரி செய்து கொண்டிருந்தேன். இவ்வளவு காலம் செய்யாத வேலையை செய்கிறேன். அணிக்காக நாம் எப்பொழுதும் நெகிழ்வாக இருக்க வேண்டும்”

- Advertisement -

என்னால் முடியாது என்றார்கள்

“நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. சிறிய வயது ஒரு போட்டி விளையாடினால் இந்தியாவுக்காக போதும் என்று நினைத்தேன். ஆனால் இன்று இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். ஆரம்பத்தில் என்னால் நீண்ட காலம் நிலைக்க முடியாது விளையாட முடியாது என்று சொன்னார்கள். இப்போது நான் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம்”

இதையும் படிங்க : சாம்சனின் இந்த நிலைமைக்கு இந்திய அணியைதான் குற்றம் சொல்வேன்.. ஒரு ஹீரோவை இப்படி மாத்திட்டீங்க – ஆகாஷ் சோப்ரா வருத்தம்

“ஒரு வேகப்பந்து வீச்சாளராக உடலில் காயம், வலி மற்றும் விமர்சனங்கள் என நான் பலவற்றையும் சந்தித்து இத்தனை ஆண்டுகள் தாண்டி வந்திருக்கிறேன். நாட்டுக்காக விளையாடுவது மிகப்பெரிய பெருமை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -