“தம்பி எல்லா இடத்திலும் அகமதாபாத் பிட்ச் கிடைக்காது” – கில் பிரச்சனையை வெட்ட வெளிச்சமாக்கிய இந்திய முன்னாள் வீரர்!

0
2280
Gill

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டு சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது!

இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடர் தற்பொழுது யார் பக்கமும் இல்லாமல் இருக்கிறது.

- Advertisement -

முதலில் நடைபெற்ற மூன்று டி20 போட்டிகளும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்றது. இந்த நிலையில் மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகளும் நாளையும், நாளை மறுநாளும் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடக்கிறது.

இந்த போட்டி நடக்கும் மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருக்கும். இந்தத் தொடரில் ஆரம்பத்தில் இருந்து இதுவரை மொத்தம் எட்டு இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் இதுவரை ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். அவர் ஆட்டம் இழக்கும் விதமும் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறுகையில் ” வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் மிகவும் மந்தமாக இருக்கின்றன. இதற்காக பேட்ஸ்மேன்கள் காத்திருந்து விளையாட வேண்டும். மேலும் கீழ் விரும்பும் எழுச்சியோடு பந்தை அடித்து விளையாட முடியாது. இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அகமதாபாத் போன்று எல்லா ஆடுகளங்களும் அமையாது. கிடைக்கும் ஆடுகளங்களுக்கு தகுந்தவாறு அவர் தன்னை தகவமைத்துக் கொண்டால் அவரால் அதிசயங்களை நிகழ்த்த முடியும்.

- Advertisement -

கில் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் கிடையாது. அவர் ஆரம்பத்தில் கொஞ்சம் பந்துகளை எடுத்துக் கொள்ளத்தான் செய்கிறார். அதே சமயத்தில் பந்து வேகமாக அவரிடம் வராத பொழுது, அவர் பந்தை நோக்கி செல்லும் பழக்கம் உடையவராக இருக்கிறார். இதுதான் பிரச்சினையாக இருக்கிறது.

அடுத்த போட்டியில் ஜெய்ஸ்வால் ஆக்ரோஷமான துவக்கத்தை கொண்டிருப்பார். இன்னொரு முனையில் கில் மெதுவாகத்தான் ஆட்டத்தை ஆரம்பித்து நிற்பார். அவர் ஆரம்பத்திலேயே இரண்டு மூன்று ஷாட்களுக்கு சென்றால், அது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

மேலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்கள் பந்து வீசி, ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் உள்ளே கொண்டு வரலாம். அக்சர் படேல் இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் வரலாம். பந்துவீச்சில் அவரது இடத்தை திலக் வர்மாவால் ஈடு செய்ய முடியும். ஆனால் கட்டாயம் இரண்டு மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தே ஆக வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!