“தம்பி ஷாகின் திமிரோட இரு.. ஆனா விராட் கோலிகிட்ட இருக்காத!” – அக்தர் வெளிப்படையான எச்சரிக்கை!

0
4271
Akthar

கிரிக்கெட்டில் கிரிக்கெட்டை விளையாடும் திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு அழுத்தத்தை சமாளிக்கும் மன ஆற்றல் மிக மிக முக்கியம்!

உலக அளவில் களத்தில் நிலவும் அழுத்தத்தை யாரெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இயல்பாக இருந்து விளையாடி இருக்கிறார்களோ, அவர்கள்தான் சாம்பியன் வீரர்களாக உருவாகி இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அணியில் 10 வருடம் விளையாடி இருந்தால் கூட, பத்தோடு பதினொன்றாகவே இருந்திருக்கிறார்கள்!

- Advertisement -

சமீபத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசும்பொழுது, வீரர்களை அணிக்கு தேர்வு செய்யும் பொழுது, பல விஷயங்கள் பார்க்கப்படும், அதில் ஒரு முக்கியமான விஷயம், அவர்கள் அழுத்தத்தில் இதுவரை எப்படி யாருடன் செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதும் பார்க்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்த வகையில் கிரிக்கெட்டில் அழுத்தத்தை தலைக்கு ஏற்றிக்கொள்ளாமலும், அதேவேளையில் எதிரணியை அழுத்தத்தில் வைத்தும், மிகப்பெரிய வெற்றிகளை பெற்ற வீரராக, இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி இருக்கிறார்.

விராட் கோலி எந்த அளவிற்கு அழுத்தத்தை எளிமையாக சமாளிக்க கூடியவர் என்று எடுத்துக் கொண்டால், அவர் இதுநாள் வரையில் அடித்த சதங்களில் பெரும்பாலான சதங்கள் ரன் சேஸ் செய்யும் போது வந்திருக்கிறது. ரன் சேஸ் செய்வது என்பது ஒரு தனி அழுத்தம். இப்படி அவர் அழுத்தத்தில் இருந்து பார்க்கவே முடியாது. மேலும் களத்தில் ஊக்க சக்தியாக எது கிடைத்தாலும் எடுத்துக் கொள்வார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து அக்தர் இரண்டு விஷயங்களை பேசி இருக்கிறார். அவர் கூறும் பொழுது
“ஷாகின் ஷா அப்ரிடி அணிக்கு பெரிய சொத்து. ஆனால் உங்களுக்குத் தெரியும் அவரிடம் கொஞ்சம் கூட திமிர் இல்லை. அவ்வளவுதான். அதாவது நான் 135 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினால் கூட, நான் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதாகத் திமிர் காட்டுவேன். இதுதான் ஒரு வேகப்பந்துவீச்சாளராக அவரிடம் தவறுகிறது.

அதே சமயத்தில் நீங்கள் களத்தில் விராட் கோலி விளையாடும் பொழுது அவருடன் பேசவே கூடாது. அவரை புறக்கணித்து விட வேண்டும். அவர் மீது கவனத்தை வைக்க கூடாது. அவரை ஏதாவது செய்து பிஸியாக வைத்தால், அவர் பிஸியாக இருந்தால், அந்தப் போட்டியில் அவருடைய அணியை அவரே வெல்ல வைத்து விடுவார்!” என்று கூறியிருக்கிறார்!