“தம்பி இதை மட்டும் செய்.. ஷாகின் பவுலிங்க நொறுக்கிடலாம்!” – கில்லுக்கு கைஃப் மாஸ் அட்வைஸ்!

0
2432
Gill

இந்திய அணி நிர்வாகம் தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு தமது அணியை தயார் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

கையில் இருக்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் இந்தியாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை இதற்காக இந்திய அணி நிர்வாகம் நம்பியிருக்கிறது!

- Advertisement -

கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கான தயாரிப்புகளில் இந்திய முக்கிய வீரர்கள் ஈடுபட்டு இருக்க, இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் துவக்க வீரராக தொடர்ச்சியாக விளையாட சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சதம், இரட்டை சதம் என்று விளாசித் தள்ளி, மிக கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர்தான் என்று எல்லோரும் கூறும் அளவுக்கு உயர்ந்தார்.

ஆனால் ஐபிஎல் தொடர் முடிந்து, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் நிலைமை அப்படியே சரிய ஆரம்பித்தது. சுப்மன் கில் பேட்டில் இருந்து ரன்கள் வரவில்லை. அவரது நம்பிக்கை மெது மெதுவாகவோ குறைந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 32 பந்துகளை எதிர்கொண்ட அவரால் ஒரே ஒரு பவுண்டரி உடன் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் அவருடைய இயல்பில் இப்படியான ஆட்டம் விளையாட மாட்டார். பிறகு நேபாள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் அடித்து திரும்ப வந்திருக்கிறார்.

தற்பொழுது இவர் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் “பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கில் எந்த இன்டெண்டையும் காட்டவில்லை. அவர் 32 பந்துகளை எதிர்கொண்டார். அவருக்கு ஒரு பவுண்டரி லெக்சைடில் மட்டுமே வந்தது. எனவே அவர் இன்டெண்ட் காட்டுவதில் வேலை செய்ய வேண்டும்.

பந்து வேகமாக ஸ்விங் ஆகி வரும்பொழுது, நீங்கள் வேகமாக உங்களுடைய பொசிஷனுக்கு வருவது முக்கியம். இதுவெல்லாம் நீங்கள் வலை பயிற்சிகளில் பயிற்சி செய்து முன்னேற வேண்டும்.

சைட் ஆர்ம் த்ரோ வீசக்கூடியவர்கள், பந்தை ஷேப் செய்து வீசுவார்கள். இந்த பயிற்சி நிச்சயம் கில்லுக்கு உதவி செய்யும். பாகிஸ்தானுக்கு எதிராக அவரால் சரியான நேரத்தில் பேட்டை கீழே இறக்க முடியவில்லை. ஸ்டெம்ப்புகள் தெரிந்தன. இந்த முறையில் பந்தை எறிபவரை வைத்து பயிற்சி செய்தால், நிச்சயம் அவர் பேட்டை கீழே சீக்கிரம் இறக்குவதை பந்தை எறிபவர் பரிசோதிப்பார். இது ஷாகின் அப்ரிடியை எதிர்கொள்வதற்கு கில்லுக்கு மிக உதவியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!